சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி + பாஜக "B டீம்" சீமான்.. இதுதான் இவர்களின் நிஜமுகம்.. வரிந்துகட்டி வந்த ஜோதிமணி.. என்னாச்சு

மோடி, சீமான் இருவரை பற்றியும் ஜோதிமணி ட்வீட் போட்டு கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்தும் செயல்பாடுகளை இலவசம் என்று பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் கொச்சைப்படுத்துகின்றன என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இத்தகைய இலவசங்கள் குறித்து இந்தியா டுடேவுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பேட்டி தந்திருந்தார்.

தேசியக் கொடி இயக்கம் என்பது ஏமாற்று வேலை.. மக்களை திசைதிருப்பும் அரசியல்.. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி!தேசியக் கொடி இயக்கம் என்பது ஏமாற்று வேலை.. மக்களை திசைதிருப்பும் அரசியல்.. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி!

 அட்வைஸ், பர்மிஷன்

அட்வைஸ், பர்மிஷன்

அதில், "எங்களுக்கு அட்வைஸ் செய்பவர்களுக்கு, சட்டரீதியான அனுமதி இருக்க வேண்டும்.. ஒருவேளை உங்களுடைய சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அட்வைஸ் சொல்லலாம்... அல்லது, இருக்கிற கடனை எல்லாம் அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தையும் நிமிர்த்தி விட்டீர்கள், தனிநபர் வருமானத்தையும் உயர்த்திவிட்டீர்கள் என்றால், உங்க பேச்சை நாங்கள் கேட்கலாம்... இப்படி எதுவுமே இல்லாதபோது உங்க பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்? என்று பிடிஆர் கேட்டிருந்தார்.

பிடிஆர்

பிடிஆர்

ஏற்கனவே கடுப்பில் இருந்த பாஜக, இலவசங்கள் தொடர்பாக மத்திய அரசை சீண்டி, இந்த பேட்டியை தரவும் மேலும் ஆவேசமாகிவிட்டது.. பிடிஆரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியும் வருகிறது.. ஆனால், இலவசங்களால் இந்தியாவுக்கு பாதிப்பு என்றும் இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து என்றும் பிரதமர் மோடி சொல்லி வருகிறார்.. அதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 விறகடுப்புகள்

விறகடுப்புகள்

இந்நிலையில், கரூரின் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "மிக்சி, கிரைண்டர், சிலிண்டர், இவையெல்லாம் ஏழை எளிய குடும்பங்களை,குறிப்பாக பெண்கள் வாழ்வை மேம்படுத்தியிருக்கிறது. காலம் காலமாக பெண்கள் ஆட்டுக்கல்லையும், அம்மியையும்,விறகடுப்பையும் கட்டிக்கொண்டு முதுகெலும்பு ஒடிய வேலைசெய்ய வேண்டுமா? இல்லை இந்த வேலையெல்லாம் ஆண்கள் செய்வார்களா?

 B டீம் சீமான்

B டீம் சீமான்

லட்சக்கணக்கான கோடிகள் பெருமுதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்யும் திரு.நரேந்திர மோடியும், பாஜகவின் பி டீம் திரு. சீமானும் தான் எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்தும் செயல்பாடுகளை இலவசம் என்று கொச்சைப்படுத்துவார்கள்... இதுதான் இவர்களின் உண்மையான முகம்" என்றும் ஜோதிமணி விமர்சித்துள்ளார்... ஜோதிமணியின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்புமான கமெண்ட்களும் பதிவிடப்பட்டு வருகின்றன..

 தடால், புடால் விருந்து

தடால், புடால் விருந்து

"சீமான் சொல்வது சரியே. இலவசமாக எது கிடைக்க வேண்டும் என்றால், உணவு, கல்வி, மருத்துவம், மின்சாரம், வீடு. அனைவருக்கும் வீடு உள்ளதா? டிவி, மிக்ஸி வச்சி என்ன செய்வது? வீடு இல்லாமல்? என்று ட்விட்டர்வாசிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.. பி டீம் என்று சொல்கிறீர்களே, மோடியை இரண்டு முறை தமிழகத்தில் வர வைத்து தடால், புடால் விருந்து உபசரணை செய்த திமுக தான் உண்மையான பி டீம்... 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் 5000 ரூபாய் மிக்சியும்,10000 ரூபாய் கிரைண்டரும் வாங்க முடியாத வக்கற்ற நிலையை தமிழக மக்களுக்கு உருவாக்கியது யார்? என்றும் காட்டமாக கேள்வி எழுப்புகிறார்கள்.

 கலர் + நிறம்

கலர் + நிறம்

எனினும், ஜோதிமணி, பிரதமருடன் சீமானையும் இணைத்து விமர்சித்ததுதான், முக்கியமானதாக அந்த ட்வீட்டில் பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே, "பாஜகவின் பி டீம்" என்ற கலர், சீமான்மீது தொடர்ந்து பரவலாக பூசப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய எல்லா மேடைகளிலும் பாஜகவையும், ஆர்எஸ்எஸ்ஸையும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார் சீமான்.. அவ்வளவு ஏன், சில சமயங்களில் பிரதமர் மோடி போல் மிமிக்ரியும் செய்து காட்டி கிண்டலடிப்பார்..

 ஆ.ராசா வீசிய வெடி

ஆ.ராசா வீசிய வெடி

ஆனாலும் இவர் மீதான அந்த பிம்பம் இன்னும் நீங்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.. சமீபத்தில்கூட, திமுகவின் மூத்த தலைவர் ஆ.ராசா, பாஜகவின் 5ஜி ஊழல் குறித்து குற்றச்சாட்டை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. இதைப்பற்றி, சீமானிடம் செய்தியாளர்கள் அப்போது கருத்து கேட்டார்கள்.. பாஜகவின் ஊழல் குறித்து கேள்வி கேட்டதால், எப்படியும் இதை பற்றி, கொந்தளித்து பாஜகவை சீமான் விமர்சிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அங்கேதான் சீமான் ஒரு ட்விஸ்ட் வைத்தார்.

 இப்பதான் தெரியுதா?

இப்பதான் தெரியுதா?

"இழப்பீடு நேர்ந்திருக்கிறது என்று சொல்லும் பெருமக்கள், இவ்வளவு காலம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க? இழப்பீடு நேரும்வரை என்ன பண்ணிட்டு இருந்தீங்க?ன்னு கேட்கிறேன்.. இழப்பீடு நேர்ந்து, 8 வருட காலம் பாஜக ஆட்சிக்கு பிறகு, இரண்டரை லட்சம் கோடி இழப்பீடு என்று இப்பதான் தெரியுதா?" என்று திருப்பி கேட்டார்.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, இன்னொரு கேள்வியைதான் சீமான் திருப்பி கேட்டாரே தவிர, ஊழல், முறைகேடு பற்றி கடைசிவரை பதில் ஏதும் சொல்லவில்லை...

 'B' TEAM

'B' TEAM

வழக்கம்போல் திமுகவிடமே, அந்த அம்பை திருப்பிவிட்டு, பாஜகவுக்கு மறைமுக சப்போர்ட் செய்திருந்ததையும் இணையவாசிகளின் கவனத்தை அப்போது ஈர்த்திருந்தார்.. சீமான் பாஜகவின் பி-டீம் என்று அழுத்தமாக குறிப்பிட்டு, அது தொடர்பாக ட்வீட்டையும் போட்டு, இன்னொரு முறை தமிழக மக்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறார் போலும் ஜோதிமணி என்கிறார்கள்..!

English summary
BJP's B team Seeman and Congress MP Jothimani slams Central Government, Prime Minister Modi மோடி, சீமான் இருவரை பற்றியும் ஜோதிமணி ட்வீட் போட்டு கேள்வி எழுப்பி உள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X