கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க வேண்டும்: கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தீர்மானம்
சென்னை: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை இணைத்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Recommended Video
கோவை மாவட்டம் அன்னூரில் , கோவை வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மத்திய அரசு, தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும், நிர்வாக ரீதியாக மாநில மறுசீரமைப்பு செய்து மேற்கு மண்டலத்தை கொங்குநாடு என்ற புதிய மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசிகளை, அனைவருக்கும் உரிய அளவில் பகிர்ந்து அளிக்காமல் சென்னை மண்டலத்திற்கு அதிகமாகவும், கோவை மண்டலத்திற்கு குறைவாகவும் ஒதுக்கீடு செய்வதை கண்டிக்கிறோம். ' ஜெய்ஹிந்த் என்ற நமது தேசபக்தி முழக்கத்தை திமுக ஆதரவு எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டசபையில் அவமதித்தற்கும், அதற்கு துணையாக உள்ள தமிழக அரசுக்கும் கண்டனங்கள்.
தென்னை விவசாயிகளை பாதுகாக்க கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை ஒரு கிலோ 150 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications