Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காததும், பங்கேற்ற மற்ற தோழமை கட்சிகள் காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதும் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பாஜக தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வர முயற்சித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். இந்த மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. ஆனால் மூன்றில் 2 பங்கு ஆதரவு இல்லாததால் மசோதா நிறைவேறவில்லை.

Delimitation

இந்தியா கூட்டணி

அப்போது இந்தியா கூட்டணியில் திமுக வலிமையான கட்சியாக இருந்தது. எனவே எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த மசோதாவை தோற்கடித்தன. இப்போது தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியை பலவீனமாக்கியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு வரை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தலுக்கு பின்னர் தவெக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது.

வெளியேறிய திமுக

இதன் காரணமாக திமுக கடும் அதிருப்பதியில் இருக்கிறது. எனவேதான் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. மட்டுமல்லாது காங்கிரஸை கடுமையாக விமர்சித்து டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் பகுதியில் பேனர்களையும் வைத்திருந்தது. மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்திருக்கிறது. எனவே மம்தா பானர்ஜி குழப்பத்தில் இருக்கிறார். இது தவிர, கேரளத்தில் சிபிஎம் கட்சியை காங்கிரஸ் கையாண்ட விதம், காம்ரேட்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இந்த அதிருப்தியை இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் கொட்டி தீர்த்திருக்கின்றன. ஆக மொத்தம் இப்போது இந்தியா கூட்டணி கடுமையாக பலவீனமடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

பாஜகவின் பிளான்

இந்த பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை திட்டத்தை செயல்படுத்தலாம் என்று பாஜக கணக்கிட்டு வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு போன்ற மூத்த தலைவர்கள் மூலம் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய எம்பிக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கான வழிகளை பாஜக திறந்து வைத்துள்ளது.

மக்களவையில் பாஜகவின் கணக்கு

இந்த மசோதா நிறைவேற 3ல் 2 பங்கு.. ஆதாவது மொத்தம் 362 எம்பிக்கள் மக்களவையில் ஆதரவளிக்க வேண்டும். 3 எம்பிக்கள் மரணமடைந்ததால், பெரும்பான்மை எண்ணிக்கை 360 என இருக்கிறது. இப்போதைக்கு பாஜகவின் பலம் 293. இங்குதான் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்டம் இருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸில் குழப்பம்

மம்தா பானர்ஜி தலைமையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஏற்கெனவே அக்கட்சியின் ரித்தோ பிரித்தோ பானர்ஜி கைப்பற்றிவிட்டார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அவர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, கட்சியிலிருந்து விலகியிருந்த திரிணாமுல் எம்பி காகோலி கோஷ் தஸ்தி தலைமையில் 20 திரிணாமுல் எம்பிக்கள் கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர். இவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வெளிப்படையாக பேசி வருகிறார்.

அப்படியெனில், மக்களவையில் மொத்தமுள்ள 29 திரிணாமுல் எம்பிக்களும் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால், பாஜகவின் பலம் 322 என அதிகரித்துவிடும்.

திமுகவுடன் பேச்சுவார்த்தை

அதேபோல காங்கிரஸ் மீது திமுக அதிருப்தியில் இருப்பதால், அக்கட்சியின் எம்பிக்களிடம் நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு கேட்க பாஜக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவுக்கு 22 எம்பிக்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவும் கிடைத்தால் பாஜகவின் பலம் 344 என அதிகரிக்கும். இதுபோக.. சிவசேனா உத்தவ் தாக்ரே கட்சியிலிருக்கும் 9 எம்பிக்களில் 6 பேரிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவும் சேர்ந்தார் 350 ஆதரவு கிடைத்துவிடும்.

இன்னும் 10 எம்பிக்களை எப்படியாவது தேடி பிடித்து சேர்த்துக்கொள்ளலாம் என்று பாஜக முடிவெடுத்திருக்கிறது. இது மட்டும் நடந்தால் தொகுதி மறுவரையறை மசோதா வெற்றி பெற்றுவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+