சூப்பர் பாஜக.. "டாக்டரையே" தட்டி தூக்கி.. செம மாஸ்டர் பிளான்.. குழம்பி போன திமுக, அதிமுக!

திமுகவின் அதிருப்தியாளர்களுக்கு பாஜக குறி வைத்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தாமரையை எப்படியாவது மலர வைப்பது என்பதுதான் இந்த முறையும் பாஜகவின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. இதற்காகவே பாஜக எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றும், சும்மா அம்மி மாதிரி ஒவ்வொரு கட்சிகளின் தலையிலும் விழுந்து கொண்டிருகிறது..!

எல். முருகன் மாநில தலைவராக பொறுப்பேற்றது முதலே சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது தமிழக பாஜக..

தமிழிசை இருந்தபோது காணப்பட்ட நெளிவுசுளிவு, பொறுமை, சமயோஜிதபுத்தி, இப்போது இல்லை.. மொத்தமும் அதிரடிதான்.. தடாலடிதான்!

 தாமரை

தாமரை

"நமீதா, ஜீவஜோதி, காயத்ரி ரகுராம் இவங்களை எல்லாம் கட்சிக்குள் சேர்த்து, பொறுப்பும் தந்துட்டு இருந்தால், தாமரை எப்படி மலரும்" என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் பெரும்பாலானோர் எழுப்பவே செய்தனர்.. இதற்கு பிறகுதான் முருகனின் பாணி வேறு மாதிரியானது.. படித்தவர்கள், புகழ்பெற்றவர்கள், என முக்கிய புள்ளிகளை தன் கட்சிக்குள் கொண்டு வந்தார்.

 ஸ்கெட்ச்

ஸ்கெட்ச்

இதற்கடுத்து, பிற கட்சிகளில் உள்ள அதிருப்திகளுக்கு ஸ்கெட்ச் போட்டு, பாஜக பக்கம் இழுக்கும் வேலை நடந்தது.. இதற்கு குக செல்வம், விபி துரைசாமி போன்றோரையும் உதாரணமாக சொல்லலாம்.. எனினும் தேர்தல் சமயத்தில் குறி வைத்து பிளான் செய்து இழுத்தது குஷ்புவைதான்..இப்படி பலம் பொருந்திய நபர்களாக பாஜக மாறி கொண்டே வருவதை மறுக்க முடியாது. இந்த சமயத்தில்தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் ஒதுக்கீடு விவகாரங்கள் போன்றவை சூடுபிடித்தன.

கூட்டணி

கூட்டணி

இதையும் பாஜக தனக்கு சாதமாகவே மாற்றி கொள்ள முயன்றது.. தனக்கு குறைந்த அளவு அதிமுக கூட்டணியில் சீட் தந்தது ஒரு பக்கம் இருந்தாலும், யாரெல்லாம் அதிருப்தியாளர்களோ அவர்களை தங்கள் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.. இதற்கு சமீபத்திய உதாரணம் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன்.. இவர் காலையில்தான் கட்சியில் பாஜகவில் சேர்ந்தார்.. சாயங்காலமே சீட் தந்துவிட்டார்கள்.. இதில்தான் பாஜகவின் வியூகத்தை நம்மால் தெளிவாக பார்க்க முடியும்.

 திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

டாக்டர் சரவணனை பொறுத்தவரை படுசுறுசுறுப்பானவர்.. தொகுதிக்குள் படுபேமஸ்.. எத்தனையோ நல்ல காரியங்களை செய்து வந்துள்ளார்.. சட்டசபை நடக்கும்போதெல்லாம், திருப்பரங்குன்றம் தொகுதி நலனில் இவர் காட்டிய அக்கறையும் மறுக்க முடியாது.. பொதுவாகவே மதுரையில் கம்யூனிஸ்ட்டு கட்சி பலம் பொருந்தி இருக்கும்.. அதனால்தான், எம்பி வெங்கடேசனுக்கு கடந்து முறை சீட் தந்தார்கள்.இப்போதும், அதை மனசில் வைத்து கொண்டுதான், திருப்பரங்குன்றத்தை கம்யூனிஸ்ட்டுக்கு திமுக ஒதுக்கி உள்ளது.. இதனால் அதிருப்தி அடைந்த சரவணன் பாஜகவில் இணைந்துவிட்டார் என்பது பொதுவான செய்தி.

 புறக்கணிப்பு

புறக்கணிப்பு

ஆனால், சமீப காலமாக இவர் பாஜகவுடன் பேச்சு நடத்தி வருவதால்தான் திமுக இவரை புறக்கணித்துள்ளது என்கிறது ஒரு தரப்பு.. கொரோனா கால செயல்பாடு முதல் தொகுதியை தன் கைப்பிடியில் இந்த 4 வருஷம் வைத்திருந்த ஒருவரை திமுக கைநழுவி விட்டிருக்க கூடாது, நிச்சயம் அவருக்கு சீட் தந்திருக்க வேண்டும் என்கிறது மற்றொரு தரப்பு.

 சீட் சாத்தியம்?

சீட் சாத்தியம்?

இதற்கு நடுவில்தான் பாஜக தன் வேலையை காட்டி உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. காலையில் கட்சியில் சேர்ந்தால், மாலையிலேயே சீட் ஒதுக்கீடு என்பது சாத்தியம் கிடையாது. பாஜகவை பொறுத்தவரை வேட்பாளர் லிஸ்ட் எப்போதோ ரெடியாகி விட்டது.. அந்த லிஸ்ட்டை டெல்லிக்கு அனுப்பி ஓகே ஆன பிறகுதான், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்பதே வெளியாகும்.. இதுதான் அந்த கட்சியின் நடைமுறை.

சரவணன்

சரவணன்

அப்படி இருக்கும்போது, டாக்டர் சரவணனிடம் பாஜக எப்போது கட்சி தாவல் என்ற பேச்சை ஆரம்பித்தது? எப்போது அவரை சமாதானப்படுத்தியது? என்ன சொல்லி சமாதானப்படுத்தியது? திமுகவில் இந்த முறை தனக்கு சீட் கிடையாது என்ற விஷயம் சரவணனுக்கு எப்படி முன்பே தெரியும்? என்பன போன்ற நம் சந்தேகங்களையும் தமிழக மக்களிடமே விட்டுவிடலாம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+