நல்ல வாய்ப்பை நழுவவிட்ட தமிழகம்! உ.பி.க்கு போன செமி கண்டக்டர் தொழிற்சாலை! பாஜக அட்டாக்
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கவிருந்த செமி கண்டக்டர் தொழிற்சாலை, உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றது வியப்பை அளிக்கிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: உ.பி., மாநிலம், கவுதம புத்தா மாவட்டம் ஜேவாரில், எச்.சி.எல்., - பாக்ஸ்கான் நிறுவனங்கள், 3,706 கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கும், 'செமிகண்டக்டர்' ஆலைக்கான ஒப்புதலை, மத்திய அரசு கடந்த 14ம் தேதி வழங்கியுள்ளது. இது, மொபைல் போன், லேப் டாப், வாகனங்களுக்கான, 'வேபர்ஸ்' உருவாக்கும் தொழிற்சாலையாக அமைய உள்ளது.
வரும் 2027ல் உற்பத்தியை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தொழிற்சாலை தமிழகத்தில் துவக்கப்பட இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், உ.பி.,யில் துவங்குவது வியப்பு அளிக்கிறது. தமிழக அரசு மிகப்பெரிய வாய்ப்பை நழுவ விட்டிருப்பது வருந்தத்தக்கது.
உற்பத்தி மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்று பெயர் பெற்ற தமிழகம், இந்த விவகாரத்தில் தவறிழைத்ததா? அல்லது உ.பி., மாநிலம், தமிழகத்தை விட அதிக சலுகைகளை வழங்கியுள்ளதா? சென்னை விமான நிலைய விரிவாக்கம் தடைபட்டு வருவதும், தி.மு.க., அரசின் கொள்கை முடக்குவாதமும், தொழில் துறை குறித்த அலட்சியமும் தான் மிக முக்கிய காரணங்கள்.
இந்தியா முழுதும் பல்வேறு மாநிலங்களில் கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தமிழக அரசு நத்தை வேகத்தில் நகர்வது இனியும் நல்லதல்ல. சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களில் முதன்மையாக உள்ளதாக நாம் பெருமை கொண்டிருந்த காலம் மாறிப்போய், இன்று, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதிக உற்பத்தி செய்கின்றன.
பல்வேறு துறைகளில் பல மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தை பின்னுக்கு தள்ளி வருகின்றன. அம்மாநிலங்கள் முன்னேறி வருவதை தமிழக அரசும், முதல்வரும் உணர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பழம் பெருமை பேசி பயன் இல்லை என்பதை உணருமா, தமிழக அரசு? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஜீவர் பகுதியில் ரூ 3,706 கோடி செலவில் 6ஆவது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கெனவே 5 செமி கண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இவை அஸ்ஸாம், குஜராத்திலும் அமைகிறது. தற்போது தொடங்கப்படுவது 6-ஆவது தொழிற்சாலையாகும். இங்கு மொபைல்போன், லேப்டாப்கள், ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட சாதனங்களுக்கு தேவையான டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள் தயாரிக்கப்படும். இந்த தொழிற்சாலை 2027ஆம் ஆண்டு செயல்பட தொடங்கும். இங்கு ஆண்டுக்கு 3.6 கோடி சிப்கள் தயாரிக்கப்படும் என கூறியிருந்தார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார்












Click it and Unblock the Notifications