படிப்பில் சிறந்த இந்து மாணவிகளை மதம் மாற்றுகிறார்கள்- பாஜக நடிகை விஜயசாந்தி பகீர் புகார்
சென்னை: படிப்பில் சிறந்த இந்து மாணவிகளை மதம் மாற்றுகின்றனர் என்று பாஜகவை சேர்ந்த நடிகை விஜயசாந்தி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாணவியின் மரணம் தொடர்பாக பாஜக டெல்லி தலைமை நடிகை விஜயசாந்தி, சித்ராராய் வாகு, சந்தியா ராய், கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இக்குழு, அரியலூர் மாணவி கட்டாய மதமாற்றத்தால்தான் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இக்குழுவினர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது நடிகை விஜயசாந்தி கூறியதாவது: மதமாற்றம் குறித்து அரியலூர் மாணவி வீடியோவில் தெளிவாக கூறியுள்ளார். இல்லாத விசயத்தை நாங்கள் பேச மாட்டோம். மாணவியின் மரணம் தொடர்பாக அனைத்து கோணத்திலும் விசாரிக்கிறோம்.

கட்டாய மதமாற்றம்
மதமாற்றக் குற்றச்சாட்டை மாணவியின் குடும்பத்தினரே முன்வைத்துள்ளனர்; நாங்கள் புதிதாக பேசவில்லை. அரியலூர் மாணவியின் தந்தை 25 ஆண்டுகால திமுக உறுப்பினர். மாவட்ட ஆட்சியரிடம் நேற்று நாங்கள் பேசினோம். இந்த வழக்கு சிபிஐயிடம் இருப்பதால் அவர் அதிகமாக எதுவும் கூறவில்லை. இறந்த மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ1கோடி இழப்பீடு வழங்க வேண்டும். வரும் காலத்தில் யாரும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளிடம் மதமாற்றத்திற்காக வற்புறுத்தக் கூடாது என்பதுதான் குழுவின் நோக்கம்.

முதல்வர் ஏன் மவுனம்?
அரியலூர் மாணவி வீடியோவில் கூறியதால்தான் மதமாற்றம் தொடர்பான உண்மை வெளியில் தெரிந்தது. இதுபோல பல இடங்களிலும் நடக்கலாம். இதில் அரசியல் செய்வது எங்களது நோக்கம் இல்லை. மாணவியை அவரது சித்தி கொடுமைப்படுத்தியாக கூறுவது தவறான தகவல். இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சி இது. தமிழக அரசு கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக இருக்கிறது. இந்தியாவில் 80 சதவீதம் இந்துக்களே இருக்கின்றனர். மாணவியின் மரணம் தொடர்பாக முதல்வர் அனைத்து தரப்பிலும் விசாரிக்க வேண்டும். படிப்பில் சிறந்த இந்து மாணவிகளை மதம் மாற்றுகிறார்கள். இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளது. திமுக அரசு, தமிழக கலாசாரத்தை மாற்ற முயல்கிறது. முதலமைச்சர் ஏன் இந்த விசயத்தில் மவுனமாக இருக்கிறார்? இவ்வாறு நடிகை விஜயசாந்தி கூறினார்.

யார் யாரிடம் விசாரணை
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: மாணவி தற்கொலை தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது முதல் ஏழை மாணவிக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருகிறோம். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது எங்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி. மாணவி மரணம் தொடர்பாக நால்வர் குழு தனது விசாரணை அறிக்கையை பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம் வழங்குவர். மாணவியின் அருகில் உள்ள வீட்டாரிடமும் , உறவினர்களிடமும் மரணம் குறித்து கேட்டறிந்துள்ளோம்.

மதமாற்ற தடை சட்டம் தேவை
அரியலூர் மாவட்டத்தின் குக்கிராமத்தில் நடந்த சம்பவத்திற்கு பாஜக தேசியத் தலைமை குழு அமைத்ததன் மூலம் பெண் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பாஜக தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மாணவியின் மரணம் தொடர்பாக காவல்துறை செய்த தவறால் மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ-க்கு சென்றுள்ள நிலையில், மாநில அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது. அதிமுக உட்பட பிற கட்சிகள் இந்த விசயம் குறித்து பேசாதது எங்களுக்கு வருத்தம் தருகிறது. சட்டசபையில் பேச எனக்கு முறையாக நேரம் தரப்படுவதில்லை. முறையாக நேரம் கொடுத்தால் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் குறித்து சட்டசபையில் பேசுவேன். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications