சென்னை தாம்பரம் அருகே பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை.. விநாயகர் சதுர்த்தி இரவு பயங்கர ஸ்கெட்ச்
சென்னை: சென்னை பெருங்களத்தூரில் பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் வெட்டிக் கொலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மர்ம நபர்கள் இரவில் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை இன்று காலை கைப்பற்றி போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் (வயது35). இவர் மீது தாம்பரம், பீர்க்கன்கரணை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேசனில் பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கின்றன. இவர் ரவுடி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பீரி வெங்கடேசன் பாரதிய ஜனதா கட்சியில் பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதியில் எஸ்சி மண்டல தலைவராக இருந்தார். இந்த நிலையில் இன்று காலையில் பழைய பெருங்களத்தூர், குட்வில் நகரில் உள்ள காலி இடத்தில் இருந்த முட்புரில் பீரி வெங்கடேசன் பலத்த வெட்டுக்காயங்களுடன் இருப்பதாக பீர்க்கன் கரணை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரில் வந்த போலீசார் பீரி வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பீரி வெங்கடேசன் கொலை குறித்து போலீசார் கூறும் போது, ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் பழிக்குப்பழியாக தீர்த்து கட்டியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். இதனிடையே குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பீரி வெங்கடேசன் நேற்று இரவு கடைசியாக யாருடன் பேசினார். அவரை எங்கு அழைத்துச் சென்றார்கள். என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேர் ஜெயிலில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள் தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதால் பீரி வெங்கடேசனை அவர்கள் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பீரி வெங்கடேசனை கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு வீட்டில் வைத்தே அவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்றிருக்கிறது. இதில் வெங்கடேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், அப்போதே போலீசார் வெங்கடேசனை இந்த பகுதியில் இப்போது இருக்க வேண்டாம் என்று எச்சரித்தனர்.
இதைத்தொடர்ந்தே பீரி வெங்கடேசன் புதுபெருங்களத்தூரை விட்டு வெளியே சென்றார். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவர் ஊருக்கு வந்திருக்கிறார். இதனை அறிந்த எதிர்தரப்பினர் வெங்கடேசனை திட்டம் தீட்டி பழிதீர்த்து விட்டதாக கூறப்பபடுகிறது. பாஜக பிரமுகர் பெருங்களத்தூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications