11 + 10 + 4.. கணக்கு ஓவர்.. பாஜக + பாமக + தேமுதிக.. வேகமாக வீசப்படும் வலை? ஓபிஎஸ்ஸுமா? அலர்ட் அதிமுக
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான மெகா கூட்டணி கணக்கு ஒன்றை பாஜக போட்டுள்ளதாம். அதிமுக இல்லாமல் மற்ற கட்சிகளை வைத்து இந்த பிரம்மாண்ட கூட்டணி உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளதாம்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி ஆலோசனைகள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய அளவில் இந்திய கூட்டணி வேகமான கூட்டணி பகிர்வு முடிவுகளை எடுத்து வருகிறது. ஆம் ஆத்மியும் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் இடங்களை அறிவித்துவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில் இந்த முறை 3வது அணி புதிதாக ஒன்று உருவாக்கி நாம் தமிழரோடு சேர்த்து 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன கூட்டணிகள்: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்தியது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அதன்படி இந்த முறையும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக , விடுதலை சிறுத்தைகள், இன்னும் சில உதிரி கட்சிகள் உடன் திமுக கூட்டணி வைக்க உள்ளது. இன்னொரு பக்கம் நாம் தமிழர் தனித்து நிற்க உள்ளது.
கண்டிப்பு: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 27ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். நீங்கள் நடைபயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம். மோடி வருகைக்கு முன் கூட்டணி இறுதியாகும் என்கிறார்கள்.
பாமக, தேமுதிக, இரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக கூட்டணிக்கு எப்படியாவது இழுத்து வர வேண்டும் என்று தமிழக பாஜக பகீர பிரயத்னம் செய்து வருகிறதாம்.
அதன்படி பாமக 10 சீட், தேமுதிக 4 சீட் என்று கொடுத்து, அழைத்துவர கடும் முயற்சிகள் நடக்கிறதாம். இரண்டு ராஜ்யசபா இடங்களை, இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால் இதை பாஜக ஏற்கவில்லை. ராஜ்ய சபா சீட் கிடையாது மாறாக தேர்தலுக்கான செலவீனங்களுக்கு, பணம் கேட்டதில் மூன்றில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதி தரப்பட்டு உள்ளதாம்.
பாமக -10
தேமுதிக -4
டிடிவி தினகரன் -4
ஓபிஎஸ் -2
பாஜக - 11
ஐஜேகே-1 , மற்றவை-2
புதிய தமிழகம் -2
தமிழ் மாநில காங்கிரஸ் -2 என்று கூட்டணிக்கு தர பாஜக ரெடியாக இருக்கிறது என்கிறார்கள்.
அதிமுக தனித்துவிடப்பட்டது: இப்படி ஒரு கூட்டணியை பாஜக எப்படியாவது அமைத்துவிட்டால் அதிமுக தனித்துவிடப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். முக்கியமாக பாமக, தேமுதிக இல்லை என்றால் அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி எதுவும் இருக்காது. புதிய தமிழகம் கூட பாஜக கூட்டணிக்கு போகும் சூழலில் உள்ளது. இது அதிமுகவிற்கு சிக்கலாக மாறி உள்ளது. ஏற்கனவே மாஜி அதிமுக அமைச்சர் சிவி சண்முகம், பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசிவிட்டு வந்தார். ஆனால் இன்னும் கூட்டணி கதவுகள் மட்டும் திறக்கப்படவில்லை. எனவே பாமகவை எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என்ற கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications