ரயிலில் ரூ.4 கோடி.. பாஜகவைச் சூழ்ந்த பஞ்சாயத்து! சுறுசுறு சிபிசிஐடி.. எண்ட்ரி கொடுத்த கேசவ விநாயகம்
சென்னை: சென்னை தாம்பரத்தில் கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த பணம் பாஜக பிரமுகரான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் முன்பாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் பாஜக அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றதோடு, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 640 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது இந்திய அளவில் 3வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடும் கண்காணிப்பு இருந்த போது, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக 15க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைப்பற்றப்பட்ட பணம் தன்னுடையது என முஸ்தபா என்பவர் உரிமை கோரினார். இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் ஈரோட்டை சோ்ந்த ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உணவகம் நடத்தி வரும் முஸ்தபாவை நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பினா். அதன்பேரில், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அவா் விசாரணைக்கு ஆஜரானாா்.
இந்நிலையில் பணத்துக்கு உரிமை கோரிய முஸ்தபா, பொய் சொல்லி இருப்பதும் அது அவருடைய பணம் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. முஸ்தபாவின் வங்கி கணக்குகளை ஆராய்ந்த போது இவ்வளவு தொகை பரிமாற்றம் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கில் திடீர் திருப்பமாக முஸ்தபா பணத்திற்கு உரிமை கோருமாறு அறிவுறுத்திய நபர் யார் என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பாஜக அமைப்பு செயலாளரான கேசவிநாயகம் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என முதன்முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தன்னிடம் விசாரிக்க கூடாது என கேசவ விநாயகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்ற முன் அனுமதியின்றி அவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சிபிசிஐடி போலீசார் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கேசவ விநாயகம் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் முன் அவர் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆனார். அவரிடம் பணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் அளித்த பதில் மற்றும் அது தொடர்பான கேள்விகளை வைத்து குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications