தந்தை பெரியார் மண் இது.. இப்படி பேசுவது எல்லாம் தவறு.. பாஜக அண்ணாமலையை சீண்டிய அண்புமணி ராமதாஸ்
சென்னை: தந்தை பெரியார் மண் இது. தந்தை பெரியார் மண்ணில் இப்படி பேசுவது எல்லாம் தவறு. எனவே பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசுக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று ஒரு அறிவிப்பு வெளியிட வேண்டும். விரைவில் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவித்து வருகிறார்கள். பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று அறிவித்து அதனை எடுத்து முடித்து நேற்று முன்தினம் 50 சதவீதம் இருந்த இடஒதுக்கீடை 65 சதவீதமாக அறிவித்தது.

EWS 10 சதவீதம் என மொத்தம் 75 சதவீத இடஒதுக்கீடு பீகாரில் வரப்போகிறது. எனவே நீங்கள் சமூக நீதி பேசுகிறோம் என்று பேசினால் மட்டும் போதாது. உங்களுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மனமில்லை என்றால் சமூக நீதி பற்றி பேசாதீர்கள். சமூக நீதி மாநாடு நடத்தாதீர்கள். இது அவசியமானது. இதனை நிச்சயமாக செயல்படுத்த வேண்டும். இதை செயல்படுத்தவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் போராட்டம் நடத்தும்.
தமிழகத்தில் சந்து சந்தாக கடைகள் இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக தமிழகத்தில் மதுக்கடைகள் 5 ஆயிரம் தான் இருக்கிறது. ஆனால் இந்த சந்துக்கடை 25 ஆயிரம் கடைகள் இருக்கிறது. அதிக சந்துக்கடைகள் தருமபுரியில் தான் இருக்கிறது. இப்படி இருக்கிற சூழலி 10 வயது, 13 வயது பிள்ளைகள் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு பக்கம் மது மறுபக்கம் போதைப்பொருள். ஒரு தலைமுறையையே நாசப்படுத்திவிட்டார்கள். அதனால் போதை ஒழிப்பு பிரிவுக்கு கூடுதலாக 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் காவலர்களை நியமனம் செய்ய வேண்டும்.
தந்தை பெரியார் மண் இது. தந்தை பெரியார் மண்ணில் இப்படி பேசுவது எல்லாம் தவறு. எனவே பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசுக்கூடாது. இது எங்களுடைய பாமகவின் முன்னோடிகளாக 3 பேரை வைத்துள்ளோம். ஒன்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் கார்ல் மார்க்ஸ். ஆகிய 3 பேரை பற்றி தவறாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
எதிர்க்கட்சிகளை குறிவைத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் நேர்மையாக நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க இப்படி நடக்கிறது. மக்களுக்கு இது போன்ற வருமான வரி, அமலாக்கத்துறை மீது நம்பிக்கை வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications