“பிளேட்டை துடைக்கதான் வடமாநில தொழிலாளர்கள் வருகின்றனர்” எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சுக்கு கண்டனம்
சென்னை: பானி பூரி விற்கவும், பிளேட்டை துடைக்கவும்தான் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சரின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது, "வடக்கே உள்ளவர்கள் ஹிந்தி பேசுவதால் ஹிந்தியை மட்டும் அவர்கள் படிக்கிறார்கள். இந்த காரணத்தால் வேலை வாய்ப்பு இல்லாமல் கட்டிட தொழிலாளியாக, டேபிள் துரைப்பவர்களாக, பானி பூரி விற்பவர்களாக தமிழகத்துக்கு வருகிறார்கள்.

அமைச்சர் பேசியது என்ன?
நம்முடைய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்கள். வெளிநாடுகளில் சென்று கோடி கோடியாய் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏனெனில், இரு மொழிக் கொள்கையில் ஆங்கிலம் படித்ததுதான் காரணம். எல்லா கிராமத்தை சார்ந்தவர்களும் வெளிநாடு சென்று வேலைவாய்ப்பு பெறக்கூடிய கம்ப்யூட்டர் படிக்கும் வாய்ப்பை கலைஞர் உருவாக்கி கொடுத்திருக்கிறார்" என்று பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக எதிர்ப்பு
அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு சமீபத்திய தாக்குதல்களை சாட்சி என்றும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயருக்கு இது களங்கம் விளைவிப்பதாகவும் விமர்சித்திருக்கிறார்.
பாஜக விமர்சனம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து கூறுகையில், "திமுக தொடர்ந்து வட மாநிலத்தவர்களுக்கு எதிராக வெறுப்பை துண்டி வருகிறது. இது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
திமுக விளக்கம்
திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர் யாரையும் இழிவு படுத்தவில்லை என்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் முறையான கல்வியும் வேலை வாய்ப்பும் இல்லாத காரணத்தாலே, அங்கிருந்து மக்கள் பிழைப்பு தேடி தமிழகம் வருகிறார்கள். அதைத்தான் அமைச்சர் சுட்டிக்காட்டினார் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications