சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பணமதிப்பிழப்பால் இது நடந்திருக்கிறதே; அது போதாதா; அமைச்சர் பி.டி.ஆர்.க்கு பாஜக பதிலடி!

Google Oneindia Tamil News

சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணத்தை பதுக்குவது தடுத்து நிறுத்தப்பட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்றும் அந்த பாதிப்பிலிருந்து இன்னும் சாமனியர்களால் மீள முடியவில்லை எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய நிலையில் அவருக்கு பதிலடி தந்துள்ளார் நாராயணன்.

இன்று சொந்த வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால் அதற்கு காரணமே மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கார்த்திகை மாத ராசி பலன் 2021: துலாம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?கார்த்திகை மாத ராசி பலன் 2021: துலாம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

7 நகரங்கள்

7 நகரங்கள்

''பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சொத்து விற்பனையில் கருப்புபண பரிமாற்றம் 80 விழுக்காடு குறைந்துள்ளது. ஏழு முக்கிய நகரங்களில் கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2013-2016 இறுதி காலாண்டுக்கு முன் உள்ள கால கட்டத்தில் 16,15,000 புதிய வீடுகள் கட்ட துவங்கப்பட்ட நிலையில், 11,78,000 குடியிருப்புகள் விற்கப்பட்டன.''

 பணப்பரிமாற்றம்

பணப்பரிமாற்றம்

''2016 இறுதி காலாண்டுக்கு பின் -2022 மூன்றாம் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் 9,04,000 வீடுகள் துவங்கப்பட்ட நிலையில், 10,37,000 வீடுகள் விற்கப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலில், கருப்பு பணத்தை பதுக்கும் நோக்கத்துடன் முதலீடு செய்து வந்தவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் கணக்கில் வராத பணத்தை பரிமாற்றம் செய்வதை நிறுத்தி கொண்டுள்ளனர்.''

விலை குறைந்தது

விலை குறைந்தது

''தேவைக்கேற்றவாறே வீடுகள் விற்கின்ற காரணத்தினாலும், கருப்பு பணத்தை தடுத்து நிறுத்திய காரணத்தினாலும் வீடுகளின் விலைகள் குறைந்துள்ளன. அதனால் நடுத்தர மற்றும் புதிய வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சொந்த வீடு வாங்குபவர்கள் அதிகரித்து வருகின்றனர். ''

சொந்த வீடு

சொந்த வீடு

''அதாவது ஊழல், லஞ்சம், முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கும் பணத்தை சொத்துகளில் முதலீடு செய்து செயற்கையாக சந்தை விலையை அதிகரித்த சூழ்நிலையை மாற்றி, நியாயமான விலைக்கு நேர்மையானவர்கள் வாங்கும் நிலைக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவி செய்துள்ளது'' என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்திருக்கிறார். இதனிடையே பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பொருளாதார கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும் அது அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு எனவும் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bjp spokesperson Narayanan explains what is the benefit of demonetisation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X