சபாநாயகர் அப்பாவு அறைக்குப் போய் சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரன்.. பின்னணி என்ன?
சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை இன்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார். பாஜக மாநில தலைவரான பிறகு சபாநாயகர் அப்பாவுவை முதல் முறையாக சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் நயினார் நாகேந்திரன்.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளதால், சட்டமன்ற பாஜக தலைவர் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவே சபாநாயகர் அப்பாவுவை நயினார் நாகேந்திரன் சந்தித்து இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் புதிய மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் நயினார் நாகேந்திரன். ஏப்ரல் 12 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த நிகழ்வில், பாஜகவின் புதிய மாநில தலைவராக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன்.
தற்போதைய தமிழ்நாடு பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணியை உறுதி செய்திருக்கும் முக்கியமான காலகட்டத்தில் மாநிலத் தலைவராகியிருக்கிறார்.
சட்டமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நல்ல உறவை பேணி வருபவர் நயினார் நாகேந்திரன். எதிர்க்கட்சியினருடனும் அன்பாகப் பழகக் கூடியவர். நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் தலைவரான பிறகு திமுக மீது அட்டாக் மோட் ஆபரேஷனை தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் இன்று சட்டசபை கூடிய நிலையில், அதற்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை இன்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார். பாஜக மாநில தலைவரான பிறகு சபாநாயகர் அப்பாவுவை முதல் முறையாக சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் நயினார் நாகேந்திரன்.
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளதால், சட்டமன்ற பாஜக தலைவர் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவே சபாநாயகர் அப்பாவுவை நயினார் நாகேந்திரன் சந்தித்து இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் வென்றது. நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், காந்தி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து சட்டசபையில் சீனியரான நயினார் நாகேந்திரன், பாஜக சட்டமன்ற குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் பாஜக மாநிலத் தலைவராகி உள்ளதால் பாஜகவின் அடுத்த சட்டமன்ற குழுத் தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சட்டப்பேரவையில் நடக்கும் விவாதங்களின்போது, புள்ளி விவரத்தோடு பதிலளிக்க வேண்டும் என்பதால், வானதியே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ல் அப்பாவு சபாநாயகராகப் பதவியேற்றபோது அவரை வாழ்த்திப் பேசிய நயினார் நாகேந்திரன், "பேரவைத் தலைவராகியுள்ள அப்பாவு எனது குடும்ப நண்பர் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். கொள்கை மாறுபாடுகள் இருந்தா லும் நெருங்கிய நண்பர். கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்க்காமல் எங்களுக்கு அவர் அதிக வாய்ப்புகளை அளிக்க வேண்டும்." எனப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications