கோயிலுக்கு போகும் துர்கா ஸ்டாலின்... அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை எழுப்பிய கேள்வி
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலினை கோவிலுக்கு அழைத்து செல்ல அமைச்சர் சேகர்பாபு எப்படி அக்கறை காட்டுகிறாரோ, அதே போல் சாதாரண மக்களுக்கும் அக்கறை காட்ட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
அமைச்சர் சேகர் பாபு மக்களிடம் பொய் பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ளார் என்றும் மூளை இருந்தால் கோவில்களை திறக்கட்டும் என்றும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், " நேற்று அமைச்சர் சேகர் பாபு அவர்கள் சில கேள்வியை முன்வைத்திருந்தார்கள். மத்திய அரசை காரணம் காட்டி அதற்காக நாங்கள் கோவிலை திறக்கவில்லை, மத்திய அரசிடம் இருந்து அனுமதி வாங்கி கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

பொய் சொல்கிறார்
மத்திய அரசின் அனுமதி குறித்து தான் படிப்பதாக கூறி படித்தார். என்ன அனுமதி வைத்து அவர் பேசினாரோ அதிலேயே மத்திய அரசின் அனுமதியும் உள்ளது. அவர் பேசுவது 28-09-2021 உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின், 5 வது பாய்ண்ட்டில் மக்களை அதிகம் கூட அனுமதிக்காதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது,

கோயில்கள் திறப்பு
அதேபோல் அதில் 7வது பாய்ண்ட்டில் எங்கேயெல்லாம் டெஸ்ட் ரேட் அதிகம் 5% மேல், இருக்கிறதோ அங்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கவும், குறைவாக உள்ள இடத்தில் தளர்த்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் தர்மபுரியில் மட்டும் தான் அதிகபட்சமாக 2.48% உள்ளது. தற்போது கேரளாவில் திறந்துவிட்டார்கள். மகாராஷ்டிராவில் திறந்துவிட்டார்கள். கர்நாடகாவில் திறந்துவிட்டார்கள். தசராவிற்கு திறந்து உள்ளார்கள். நவராத்திரிக்கு திறந்து உள்ளார்கள். என்ன கதை சொல்லிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. ஒரு குடும்பத்திற்கு சேவை செய்து கொண்டிருக்கிறார். அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும். மக்களிடம் பொய் சொல்வதை மட்டுமே சேகர் பாபு பிழைப்பாக வைத்திருக்கிறார். வேண்டுமென்றால் அந்த 7வது பாய்ண்ட்டை வைத்து விவாதம் செய்யலாம்.

துர்கா ஸ்டாலின்
1000 பாஜக வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால் 100 பூத் தலைவர்களை அனுப்பினால் திமுகவை அசைத்து காட்டுவோம். சேகர் பாபு அவ்வப்போது குழம்பி விடுகிறார். முதலமைச்சரின் துணைவியாரை எப்படி கோவிலுக்கு அழைத்து செல்ல அக்கறை காட்டுகிறாரோ, அதே போல் சாதாரண மக்களுக்கும் அக்கறையை காட்ட வேண்டும்.

படங்கள்
மத்திய அரசு எப்போது தியேட்டரை திறக்க சொன்னது, கடவுள் மறுப்பை திணிக்கவும், சன் குழுமம் மற்றும் உதயநிதி தயாரிக்கும் படங்களை நன்றாக ஓட வேண்டும் என்பதற்காகவே கோவில்கள் வார இறுதிநாளில் மூடப்படுகிறது.

அண்ணாமலை கேள்வி
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வைத்து மற்ற மாநிலங்களில் கோவில்களை திறக்கும் போது, திமுக தலைவர்களுக்கு ஆங்கிலம் படிக்க தெரியாதா? மத்திய அரசின் ஆர்டரை படிக்க தெரியாதா? இன்று 3வது நாள், 10 நாளுக்கு மேல் நாங்கள் வருவது வருவது தான் ஸ்தம்பிக்க வைப்போம், 100 கிளை தலைவர்கள் அனுப்பி வைக்கிறோம் பாருங்கள்.

திருமாவளவன் குறித்து அண்ணாமலை
சேகர் பாபுவிற்கு உண்மையிலேயே மூளை இருந்தால் கோவில்களை நாளை திறக்கட்டும். 2024 ல் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது. அப்படி இருந்தால் தான் திருமாவளவன் கூட்டணி வைக்க முடியும், திருமாவளவன் ஜி.எஸ்.டி குறித்து உருப்படியாக படித்து விட்டு வந்து பேச வேண்டும். அதே போல் திருமாவளவன் நீட் குறித்து புரிதல் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். கோவிலுக்கு வெளியில் இருக்கும் சிலைகளை அகற்ற நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. அதனை அரசு அகற்றட்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' இயக்கத்தை நேற்றுதான் தொடங்கினாரா? தீயாகப் பரவிய தகவல்.. உண்மை என்ன? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications