சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர வாய்ப்பிருக்கிறது... பாஜக தலைவர் எல்.முருகன் கணிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழவுள்ளதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

2 ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அதன் தாக்கம் தமிழகத்தில் எதிரொலிக்கக் கூடும் எனவும் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் பாஜக கூட்டணி ஆட்சி தான் வரும் எனவும் முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கஃபீல் கானை உடனே விடுதலை செய்யுங்கள்.. என்எஸ்ஏவை நீக்குங்கள்.. அலஹாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு!கஃபீல் கானை உடனே விடுதலை செய்யுங்கள்.. என்எஸ்ஏவை நீக்குங்கள்.. அலஹாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு!

ரஜினி வருவாரா?

ரஜினி வருவாரா?

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தேசியமும் தெய்வீகமும் என்ற கொள்கையில் பாஜகவிற்கும் ரஜினிகாந்திற்கும் ஒரே நிலைப்பாடு இருப்பதால் இணைவதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரசியலை பொறுத்தவரை எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் மாறலாம் என்றும் தங்களுடன் ரஜினிகாந்த் வருவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் முருகன் கூறியிருக்கிறார்.

ஆட்சி மாற்றம்?

ஆட்சி மாற்றம்?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பில்லை எனக் கூறிய எல்.முருகன், பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் எனத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நிகழவுள்ளதாகவும் அவர் பொடிவைத்து பேசியுள்ளார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி வழக்கு தீர்ப்பு

2ஜி வழக்கு தீர்ப்பு

நாட்டையே உலுக்கிய 2 ஜி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக மிக அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த தீர்ப்பின் தாக்கம் தமிழகத்தில் நிச்சயம் எதிரொலிக்கக் கூடும் எனவும் முருகன் கூறியுள்ளார். முருகனின் இந்தக் கருத்து மறைமுகமாக திமுகவை எச்சரிக்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாஜக கைகாட்டும் கட்சி தான் ஆட்சிக்கு வர முடியும் என்கிற அளவுக்கு தமிழகத்தில் கட்சி வலிமை அடைந்துவருவதாக முருகன் கூறியிருக்கிறார்.

Recommended Video

    தனித்து போட்டியிட்டாலே பாஜக 60 தொகுதியில் வெல்லும் - எல் முருகன்
    நவீன தீண்டாமை

    நவீன தீண்டாமை

    திமுகவின் முன்னணி நிர்வாகிகள் நடத்தி வரும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழி கற்றுத்தரமாட்டோம் என போர்டு வைக்கத்தயாரா என முருகன் சவால் விடுத்துள்ளார். தங்கள் பள்ளிகளில் இந்திமொழி வகுப்புகளை நடத்தும் திமுகவினர் மும்மொழி கொள்கையை எதிர்த்து நாடகம் நடத்தி வருவதாக சாடினார். இதை நவீன தீண்டாமையாக தாம் பார்ப்பதாக கூறினார்.

    English summary
    Bjp State President L.Murugan Says, Judgment in 2G case likely soon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X