Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா படகு விபத்து.. 'அன்று கண்ட காட்சி.. தமிழக அரசுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தனூரை அடுத்துள்ள ஓட்டுப்புறம் கடற்கரை சுற்றுலா தலமாக உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடற்கரையில் குவிந்தனர். கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள தூவல் தீரம் ஆற்றில் சுற்றுலா படகு சவாரி நடைபெற்று வருகிறது.

BJP state vice president Narayanan Tirupati warns Tamil Nadu government over Kerala boat accident

இந்நிலையில், நேற்று இரவு 6.30 மணியளவில் கடைசி சவாரியாக சுற்றுலா படகு 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டது. படகு புறப்பட்டு சுமார் 300 மீட்டர் தூரம் சென்றதும் ஒரு பக்கமாக சாய்ந்த படகு திடீரென கவிழ்ந்தது.

Recommended Video

    Worst In History | Kerala Boat விபத்து நடந்தது எப்படி? அதிக உயிரிழப்பு ஏன்? | Oneindia Tamil

    மீட்புப் பணி : படகு கவிழ்ந்ததை அறிந்து சிலர் நீரில் குதித்து நீந்திக் கரையை அடைந்தனர். படகு நீரில் கவிழ்ந்து சேற்றில் புதைந்தது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 22 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்துக்கு என்ன காரணம்: 25 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அந்தப் படகில் 40க்கும் மேற்பட்டோரை ஏற்றியதே படகு கவிழ முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ? மேலும், சுற்றுலா பயணிகள் லைஃப் ஜாக்கெட் அணியாமல் இருந்ததும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், அங்கு படகு சவாரி மாலை 5 மணி வரையே அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 மணிக்கு மேல் படகை இயக்கியதும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இன்று காலையும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நாராயணன் திருப்பதி மலப்புரம் படகு விபத்து தொடர்பாக தமிழக அரசை எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளிட்ட பதிவில், "தமிழக அரசுக்கு எச்சரிக்கை!! கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நேற்று படகு கவிழ்ந்து இது வரை 21 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. போதிய உயிர் காக்கும் கவசங்கள் அணியாமல் சென்றதும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலானவர்களை படகில் ஏற்றி சென்றதுமே விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    சமீபத்தில், கன்னியாகுமரிக்கு சென்றிருந்தேன்.விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகில் செல்ல நேர்ந்தது. அந்த படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் பயணிகள் இருந்ததும், பயணம் செய்தவர்களில் பலர் உயிர் காக்கும் கவசத்தை (காப்புச்சட்டை)அணியாமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது.

    BJP state vice president Narayanan Tirupati warns Tamil Nadu government over Kerala boat accident

    அதே போன்று விவேகானந்தர் பாறையில் அதன் முக்கியத்துவம் குறித்து பல இடங்களில் குறிப்பு உள்ளதோடு, சுற்றுலா பயணிகளுக்கு பல விவரங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். மேலும், விவேகானந்தர் குறித்த ஏழு புத்தக நிலையங்களை அமைக்கப்பட்டு, பல நூல்கள் விற்பனையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஆனால், திருவள்ளுவர் சிலைக்கு சென்றிருந்த போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. பல ஆயிரக்கணக்கான பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வருகின்ற இடத்தில் திருவள்ளுவர் புகழை எடுத்து சொல்ல யாரும் இல்லை என்பது வேதனை.

    அதே போல் திருக்குறளை, திருக்குறளின் பெருமையை பல்வேறு மொழிகளில் அங்கு வரும் பயணிகளுக்கு கொடுக்க வேண்டாமா? அவரின் கருத்துக்களை மக்களிடையே எடுத்து செல்ல எந்த வித எண்ணமோ, முயற்சியோ தமிழக அரசால் எடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றமே. தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இதற்கு பொறுப்பு என்று சொல்லப்படுகிறது. ஆனால், அங்கே பணியாற்றுபவர்களின் அலட்சியம் முகம் சுளிக்க வைக்கிறது. அவர்களின் கடுமை அதிர்ச்சியளிக்கிறது.

    உடன் தமிழக அரசு கன்னியாகுமரியில் கடலில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய அதே நேரத்தில், பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தில் திருவள்ளுவரின் புகழை உலக மக்களுக்கு எடுத்து சொல்ல ஆவன செய்ய வேண்டும். சுற்றுலா வளர்ச்சி கழகத்திடமிருந்து நிர்வாகத்தை அகற்றி, கல்வி துறை அல்லது தமிழ் வளர்ச்சி துறையிடம் திருவள்ளுவர் சிலை நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். வரும் முன் காப்போம்!பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு மற்றும் கடமை." இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+