ஒன்னு வழிக்கு கொண்டு வரணும்.. இல்லாவிட்டால் டேமேஜ் செய்யணும்.. என்ன பிளான்.. திமுகவை கதறவிடும் பாஜக?
திமுகவை வீழ்த்த பல வியூகங்களை பாஜக கையில் எடுத்து வருகிறது
சென்னை: ஒன்று, திமுகவை வழிக்கு கொண்டுவருவது, இல்லாவிட்டால் அந்த கட்சியை கதற விடும் அளவுக்கு டேமேஜ் செய்வது என்பதுதான் இப்போதைக்கு பாஜகவின் பிளானாம்!
மோடியின் முதல் ஆட்சியில் இருந்தே ஊழலுக்கு எதிரான போக்கு என்பதை வலியுறுத்தி வருகிறது. இப்போதைய 2-வது முறை ஆட்சியிலும் ஊழலுக்கு எதிரான செயலை கையில் எடுத்து வருகிறது.
அதன்படி, ஊழல் செய்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், குறிப்பாக காங்கிரஸ் தலைவர்கள் கட்டம் கட்டப்பட்டு ஜெயிலுக்கும் போய் வந்தனர்.

பிரதமர்
இந்நிலையில், கடந்த மாதம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் ஒரு ரிப்போர்ட் அனுப்பி இருந்தாராம்.. அதில், அவர் குறிப்பிட்டு சொன்னது திமுக-வை பற்றிதான்.. "காங்கிரசுடன் 5 முறை கூட்டணி வைத்துள்ளனர்.. 5 முறையும் காங்கிரஸ் ஜெயித்ததற்கு காரணம் திமுகதான்.. திமுகவால் காங்கிரசுக்கு பெரிய லாபம் தமிழகத்தில் கிடைத்து வருகிறது... ஆனால், அதிமுக கூட்டணியால் தமிழகத்தில் பாஜகவுக்கு அவ்வளவாக லாபம் இல்லை... பாஜக தலைவர்களுக்கு எந்த மரியாதையும் அதிமுகவில் தரப்படுவதில்லை.. வரும் தேர்தலில் 30 சீட் தருவதே பெரிய விஷயம்" என்று தெரிவித்ததாக ஒரு செய்தி கசிந்தது.

திமுக
இந்த ரிப்போர்ட்டை வைத்துதான் பாஜக திமுக பக்கம் கவனத்தை திருப்ப தொடங்கியது.. இனி தமிழகத்தில் தாமரையை மலர வைக்க வேண்டும் என்றாலோ அல்லது வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாலோ, ஒன்று, பாஜக தனித்து நிற்கலாம்.. அல்லது திமுகவிடமிருந்து காங்கிரஸை பிரிக்கும் முயற்சியில் இறங்கலாம் அல்லது திமுகவிடம்கூட கூட்டணியும் அமைக்கலாம் என்ற ரீதியில் எதிர்பார்க்கப்பட்டது.

ஏர்போர்ட்
இதில், திமுகவை தன் பக்கம் சாய்க்கும் முயற்சியில் எந்த அளவுக்கு பாஜக வியூகம் அமைத்தது, அது செயல்படுத்தியதா? அந்த யோசனைகள் என்ன ஆனது? என்று தெரியவில்லை.. அதற்குள் இந்தி விவகாரமும், கனிமொழியின் ஏர்போர்ட் விவகாரமும் பெரிதாகி விடவும், பாஜகவுடன் விரிசல் மேலும் அதிகமாகித்தான் போனது.

திமுக எம்பி
அப்படியென்றால், திமுகவின் இமேஜை டேமேஜ் செய்ய தற்போது அடுத்த ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.. திமுக எம்பிக்களின் பழைய புகார்கள், ஊழல்கள், குற்றச்சாட்டுகள் குறித்த ரிப்போர்ட்களை ரெடி செய்து தருமாறு பாஜக தலைமை கேட்டதாக ஏற்கனவே தகவல்களும் வந்தன.

ஊழல் வழக்குகள்
குறிப்பாக, 2ஜி விவகாரத்தை பாஜக விரைவில் கையில் எடுக்கும் என தெரிகிறது.. இந்த வழக்கில், ஆ.ராசா, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த நிலையில், இதனை துரிதப்படுத்தும் வேலையில் பாஜக இறங்க உள்ளதாம். அதேபோல, சாதிக்பாட்சா தற்கொலை விவகாரத்தையும் கிண்டி எடுத்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷா-மோடி என்ற இரட்டை ஜாம்பவான்களின் அடுத்த குறி திமுகவாக இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளதால், அக்கட்சி திரும்பவும் கலக்கத்தில் உள்ளதாக சலசலக்கப்படுகிறது.

விசாரணை
இந்த சூழலில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரஜேஷ் சேதி வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.. எனவே அதற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் முறையிட்டிருந்தார். இந்த சூழலில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தீர்ப்பு முடிவுகள்
சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை எல்லா கட்சிகளும் தொடங்கி உள்ள நிலையில், இதன் முடிவுகள் திமுகவின் அரசியல் பயணத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.. எப்படியும் தேர்தலுக்கு முன்பாகவே 2ஜி வழக்கில் தீர்ப்பும் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அந்த தீர்ப்பு தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

நட்டா
நட்டா பேசிய பேச்சை பார்த்தால், திமுகவுக்கு குறி வைத்துள்ளது வெளிப்படையாகவே தெரிந்தது.. அது திமுகதான்.. அன்றைய இந்திரா காந்திக்கும்சரி, இன்றைய பாஜகவுக்கும் சரி, தேசிய அளவில் சரியான எதிர்கட்சி என்றால் சித்தாந்த ரீதியாக, இன ரீதியாக, சமூக நீதிக்காகவும் சரியான அரசியலை முன்னெடுத்து செல்வது திமுகதான் என்பதால்தான் நட்டா திமுகவை வம்பிழுத்ததாகவும் சொல்கிறார்கள்.
Recommended Video

நம்பிக்கை
ஆனால், என்னதான் சொன்னாலும் சரி, பாஜகதான் என்னதான் செக் வைத்தாலும் சரி, அத்தனையையும் நொறுக்கி தள்ள திமுக தயாராகவே இருக்கிறதாம்.. இந்த வழக்கில் மறுபடியும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று ஒருமுறை நிரூபிக்கப்படுவோம் என்று நம்பிக்கையுடன் உள்ளதாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதலின் பேரில் வியூகம் வகுத்து, அதில் திமுக பயணித்து வருவதால் நிச்சயம் எல்லா பக்கமும் தங்களுக்கு சாதகமான சூழலே ஏற்படும் என அக்கட்சி கருதுகிறது.












Click it and Unblock the Notifications