சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதநம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார் சிலர்! தமிழக அரசு ஆதரிக்கிறதா? பாஜக அண்ணாமலை கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை : நடராஜர் குறித்து யூ2 புரூட்டஸ் அவமதியரியாதையாக பேசியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார் சிலர்! இதுபோன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது? என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    U2Brutus About Nadarajar | U2Brutus மீது வழக்கு பாயுமா? | Oneindia Tamil

    U2 Brutus என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் மனிதர் விஜய் என்பவர், தனது சேனலில் தொடர்ந்து பாதுகாக்க நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து அரசியல் நையாண்டியுடன் நிகழ்ச்சிகள் வெளியிட்டு வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பிரச்சினை குறித்து வீடியோ வெளியிட்ட அவர் நடராஜப் பெருமான் காலை ஏன் தூக்கி வைத்து இருக்கிறார் என விளக்குவதாக ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

    தோண்ட தோண்ட சடலங்கள்.. கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டுள்ளனர்.. பகீரை கிளப்பும் ஜெலன்ஸ்கிதோண்ட தோண்ட சடலங்கள்.. கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டுள்ளனர்.. பகீரை கிளப்பும் ஜெலன்ஸ்கி

    நடராஜர் குறித்து அவதூறு

    நடராஜர் குறித்து அவதூறு

    அந்த வீடியோவில் நடராஜர் குறித்து அவதூறாகவும், அவரது நடன அசைவுகள் குறித்து மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் கேவலமாக சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் காணொளி அவரது சேனலில் ஒளிபரப்பு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

    சர்ச்சை வீடியோ

    சர்ச்சை வீடியோ

    அந்த காணொளி பலதரப்பட்ட இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்து மதத்தைச் சார்ந்த பல்வேறு கட்சியினர் காவல்துறையிடம் சம்பந்தப்பட்ட நபர் மீது புகார்களை கொடுத்து வந்தனர். மைனர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அந்த சேனலை முடக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகின்றனர்.

    பாஜக அண்ணாமலை

    பாஜக அண்ணாமலை

    இந்நிலையில் நடராஜர் குறித்து யூ2 புரூட்டஸ் அவமதியரியாதையாக பேசியதாக புகார் எழுந்துள்ள நிலையில், இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார் சிலர்! என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர்," மத கோட்பாடுகள் மற்றும் இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார் சிலர்!

    ஆளும் திமுக அரசு

    ஆளும் திமுக அரசு

    ஆளும் கட்சியின் ஆசி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதுபோன்ற அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது?நடவடிக்கை எடுக்கத் தேவையான காலம் அவகாசம் கடந்த பின்னும் ஆளும் அரசு செயல்பட மறுப்பது ஏன்?அல்லது இச்சமூகத்தின் சகிப்புத்தன்மையைக் கண்டறிய இது நீங்கள் தேர்ந்தெடுத்த வழியா?" என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Some have the profession of slandering the faith and insulting the faith of the people! Why is the government turning a blind eye to such scandals? BJP Tamil Nadu leader Annamalai has questioned.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X