நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த மாற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், பாஜகவுக்குள் அதிகாரப் போட்டி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, "இது நம்ம இயக்கம்" என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ள சூழலில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதவி விலகலாம் என சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரது தலைவர் பதவியைக் கைப்பற்ற பாஜக புள்ளிகள் டெல்லியை வட்டமிட தொடங்கியுள்ளார்களாம்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியின் மாநிலத் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கட்சியின் பல்வேறு மட்டங்களில் இருந்து எழுந்துள்ளது.

குறிப்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்குள் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்த நிலையில், இதன் காரணமாக, நயினார் நாகேந்திரன் விரைவில் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படவுள்ளாராம்.
நயினார் நாகேந்திரன்
அதே நேரத்தில் எல்.முருகனுக்கு வழங்கப்பட்டது போல், நயினார் நாகேந்திரனுக்கும் மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவின. இந்த நிலையில், இந்த தகவல் வெளியான உடனே மாநிலத் தலைவர் பதவியை பிடிக்க பல்வேறு மூத்த நிர்வாகிகள் முயற்சிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் ராம சீனிவாசன், அர்ஜுன மூர்த்தி, ஏ.பி. முருகானந்தம், வினோஜ் செல்வம் உள்ளிட்ட பலர் மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்களாம்.
அண்ணாமலை
அடுத்த தலைமுறை முகமாக யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து தேசிய தலைமையும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சூழலை முற்றிலும் மாற்றியமைத்தது அண்ணாமலையின் வெளியேற்றம் தான். நீண்ட காலமாக தமிழக பாஜகவின் முகமாக இருந்து வந்த அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கியிருப்பது பாஜக தலைமைக்கு எதிர்பாராத சவாலாக மாறியுள்ளது.
இது நம்ம இயக்கம்
அண்ணாமலை தொடங்கியுள்ள "இது நம்ம இயக்கம்" இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல லட்சம் பேர் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, தற்போது பாஜகவுக்குள் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் முக்கிய செயற்பாட்டாளர்கள் அண்ணாமலை பக்கம் நகர்ந்து விடக்கூடும் என்ற அச்சம் கட்சி தலைமையில் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைவர்
இந்த காரணத்தினாலேயே தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் குறித்த முடிவை தேசிய தலைமை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தலைவர் மாற்றம் செய்தால், அதனால் மேலும் குழப்பம் உருவாகி, கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்து விடும் அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகிறதாம். இதற்கிடையில், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்டத் தலைவர்கள் கூட்டம்
மாநில நிர்வாக அமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவது, காலியாக உள்ள பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், திருச்சியில் நடைபெறும் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக உட்கட்சி போட்டி
தேர்தல் பணிகளில் போதுமான அளவு செயல்படாத மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்த சில நிர்வாகிகள் ஏற்கனவே கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதாகவும், இன்னும் சிலர் அடுத்த கட்ட முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காலியாகும் பொறுப்புகளை கைப்பற்ற மாநில அளவிலான நிர்வாகிகளிடையே கடும் போட்டி உருவாகியுள்ளதாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications