"நாராயணன்" பாட்டை கேட்டீங்களா.. ஸ்டாலின் செய்த காரியம்.. தர்மசங்கடத்தில் கதர்கள்.. அடித்து ஆடும் பாஜக
முதல்வர் ஸ்டாலினை பாஜகவின் திருப்பதி நாராயணன் விமர்சித்துள்ளார்
சென்னை: பேரறிவாளனை முதுகில் தட்டி கட்டியணைத்த முதல்வர் ஸ்டாலின் மீது, தமிழக பாஜக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.. இதனால், காங்கிரசுக்கு ஒரு பக்கம் தர்மசங்கடம் என்பதைவிட, திமுக மீதும் அதிருப்தி கூடி வருகிறது.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை, சுப்ரீம் கோர்ட் விடுவித்துள்ளது... இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் முதுகில் தட்டிக் கொடுத்தார் ஸ்டாலின்... இது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது..

அரவணைப்பு
பேரறிவாளன் விடுதலையாலும் முதல்வர் ஸ்டாலின் அவரை அரவணைத்ததாலும் காங்கிரஸார் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் வாயில் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்... இதனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மிகப்பெரிய சிக்கலையும் தர்மசங்கடத்தையும் இது ஏற்படுத்தி வருகிறது.

குஷ்பு சுரீர்
இந்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த பகிர்ந்த நடிகை குஷ்பு, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது என்று கேட்டிருந்தார்.. அதேபோல, தமாகாவும், "அன்று எங்களுக்கு இருந்த உணர்வுக்கூட இன்று காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு இல்லையே.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைவிட ஸ்டாலின்தான் முக்கியம் போல" என்றும் கேட்டிருந்தது.

தனிச்சிறப்பு
அதேபோல, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் நடந்துகொண்ட விதங்களை பார்த்தால், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, நேர்மையாக சட்டத்தை நிலைநாட்டக்கூடிய முதல்வராக இருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது... விடுதலையான பிறகு அவரை அதிமுகவினர் யாரும் ஆரத்தழுவி, கட்டியணைத்து, முத்தமிட்டு கொண்டாடவில்லையே" என்று கூறியிருந்தார். இதுகுறித்து எச்.ராஜா சொல்லும்போழ, பேரறிவாளனை அழைத்து கட்டியணைத்து குற்றத்திற்கு ஊக்கமளிக்கின்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார்.

வேதனை பதிவு
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-ம்ஆண்டு நினைவு நாள் இன்று காங்கிரஸ் கட்சியினரால் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.. அந்தவகையில், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.. அதில், "நெஞ்சம் மறப்பதில்லை.. நெஞ்சு பொறுக்குதில்லை.. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த உன்னை வஞ்சகம் சாய்த்ததே.. நெஞ்சம் மறப்பதில்லை.. நெஞ்சு பொறுக்குதில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

பேரறிவாளன்
ஏற்கனவே பேரறிவாளன் விடுதலையால் நொந்து போயுள்ள காங்கிரஸ் கட்சி, கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி முடித்துள்ள நிலையில், இன்னும் அதிலிருந்து மீள முடியவில்லை.. திமுக கூட்டணியில் உள்ளதால் மிகப்பெரிய தர்மசங்கடத்தில் சிக்கி உள்ளது.. கேஎஸ் அழகிரி தன்னுடைய வருத்தத்தை பல வகையில் வெளிப்படுத்திய நிலையில், பீட்டர் அல்போன்சும் தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்துவதாகவே இந்த ட்வீட் கருதப்படுகிறது.

நாராயணன் திருப்பதி
இதற்குதான், பாஜகவின் நாராயணன் திருப்பதி, பதில் தந்துள்ளார்.. இதே ட்வீட்டை தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்துள்ள தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன், இதே பாட்டை மாற்றி வேறு வரிகள் வைத்து ட்வீட் போட்டுள்ளார்.. அதில், ""நெஞ்சம் மறப்பதில்லை,நெஞ்சு பொறுக்குதில்லை, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவனை வஞ்சகம் செய்தவனை நெஞ்சிலே சாய்த்து கொண்டதை நெஞ்சம் மறப்பதற்கில்லை நெஞ்சு பொறுக்குதில்லை" என்றே இருந்திருக்க வேண்டும்" என்று திருத்தம் செய்து பதிவிட்டுள்ளார்.

நடவடிக்கை
முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையை விமர்சிக்கும் விதமாகவே "நெஞ்சிலே சாய்த்து கொண்டதை" என்று நாராயணன் சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிகிறது. இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு விமர்சித்து வருகிறார்கள்.. கூடவே "பீட்டர் சார், இப்போதாவது உண்மை எது? பொய் எது? என்பதை உணருங்கள்" என்று பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். ஆக மொத்தம், நாராயணனின் ட்விட்டர் படுபிஸியாக காணப்படுகிறது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications