"தலைவர்" முருகன்.. சின்சியர் + உழைப்பு.. அமித் ஷாவையே மிரள வைத்த சாதனை.. "லட்டு" பதவி..!
எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது
சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.. இதையடுத்து, தமிழக பாஜக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் மதிப்பும் டெல்லியில் எகிறியுள்ளது.
Recommended Video
கடந்த மார்ச் மாதம், தமிழக பாஜகவுக்கு தலைமையை அறிவித்தது.. தமிழிசை செளந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். அதுவரை யாருக்குமே தெரியாத ஒருவரை, அதாவது எல் . முருகனை தலைவராக டெல்லி அறிவித்தபோது பலருக்கும் வியப்புதான்.
அதேசமயம், சாதீய- மதவாத முகத்திரையை கிழித்துவிட்டு, புத்தம் புதிய பொலிவுடன் பாஜக தமிழகத்தில் அடி எடுத்து வைக்கிறது என்று அப்போதே கவனத்தை தன் பக்கம் திருப்பி வைத்து கொண்டது டெல்லி..!

தமிழகம்
முருகனை தமிழக தலைவராக அறிவித்த சூழலையும் நாம் இங்கு அலச வேண்டி உள்ளது.. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழகத்தின் தலைவராக நியமித்து, அதன்மூலம் அனைத்து சாதியினரையும் அரவணைக்கும் வகையில் தன் முகத்தை மாற்றும் முயற்சியைதான் பாஜக அப்போது கையில் எடுத்தது..

ஆதரவு கட்சி
பாஜக என்றாலே, பிராமணர்களுக்கான கட்சி, நாடார் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி, கவுண்டர் சமுதாயத்தினர் ஆதரவு உள்ள கட்சி என்ற பெயர்தான் உள்ளதே தவிர, வேறு சமூகத்தினர் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவில்லை... இன்னும் ஓபனாக சொல்லபோனால், ஆர்எஸ்எஸ் - பிராமணர் ஆதரவு கட்சியாகவே இது பார்க்கப்படுகிறது..

மதிப்பீடு
அதிலும், தமிழகத்தில் இந்த கட்சியை யாரும், தேசியக் கட்சியாகவும் பார்க்கவில்லை... பார்க்கவும் விரும்பவில்லை.. காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அங்கீகாரம் கூட இந்த விஷயத்தில் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை... இதுதான் கடந்த மார்ச் வரை தமிழகத்தில் இருந்த இந்த கட்சிக்கு இருந்த மொத்த மதிப்பீடு ஆகும்.

தலித் சமுதாயம்
இப்படிப்பட்ட கணிப்புகள், மதிப்பீடுகளை எல்லாம் உடைக்கும் வேலையில்தான் முருகனை தலைமை பொறுப்பில் அமர்த்தியது பாஜக மேலிடம்.. அதுமட்டுமல்ல, பாஜகவின் முழுகவனமும் தலித் சமுதாயத்தினரின் மீதுதான் அப்போதிருந்தே உள்ளது.. இதற்கு காரணம், தலித் சமுதாயத்தினர் மத்தியில் திமுக ஆதரவு நிலை இல்லை என்பதால், அதை தனக்கு சாதகமாக்கி கொள்ளவே முருகனை தேர்ந்தெடுத்தது.

அரசியல்
இதற்கு பிறகு எல்.முருகன் பொறுப்பேற்றார்.. தமிழிசை சவுந்தராஜன் பொறுப்பில் இருந்தவரை, அவரது அரசியல் மென்மையானது.. தன்மையானது.. பக்குவம் நிறைந்தது.. ஆனால், முருகனின் அரசியல் அப்படிஇல்லை.. இது கொஞ்சம் அதிரடியானது.. முரட்டுத்தனமானது.. களத்தை அசைத்து பார்க்க கூடியது.. இப்படி ஒரு தலைமைதான் இந்த கட்சிக்கு அப்போதைய தேவையானதாகவும் இருந்தது.

பெரிய புள்ளிகள்
பொறுப்புக்கு வந்த ஒருசில மாதங்களிலேயே தமிழக பாஜகவுக்கே ஒரு கலர் தந்ததும் முருகன்தான்.. இவர் தலைமையில்தான் ஏராளமானோர் கட்சியில் இணைந்தனர்.. குக செல்வம், முதல் குஷ்புவரை எல்லாருமே பெரிய புள்ளிகள்தான்.. அதுவும் திமுக, காங்கிரஸ் என மெகா கட்சியை சேர்ந்தவர்கள்... இதுபோன்ற பிரமுகர்களை பாஜக பக்கம் அழைத்து வரவும் ஒரு தனி திறமை வேண்டும்.. அதை கனகச்சிதமாக செய்து காட்டியது முருகன்தான்.

ரவுடிகள்
அண்ணாமலை போன்ற அதிகாரிகளை உள்ளே அழைத்து கொண்டாலும், ரவுடிகளையும், ஜெயிலுக்கு போனவர்களையும்கூட கட்சியில் இணைக்கும் அளவுக்கு ஒருகட்டத்தில் துணிந்தே இருந்தார் முருகன்.. இதற்கான காரணத்தையும் அவரே ஒருமுறை சொல்லி இருந்தார்.. பாஜகவுக்கு வந்தால் அவர்களை திருத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று விளக்கமும் தந்தார்.. ஆக, படித்தவர் முதல் ரவுடிகள் வரை இணைத்து கட்சியின் பலத்துடன், தன் பலத்தையும் சேர்த்தே பெருக்கி கொண்டதே முருகனின் ஆகசிறந்த பிளஸ்..!

பேட்டிகள்
முருகன் இதுவரை இந்த ஒருவருடத்தில் தந்த பேட்டிகளை பார்த்தாலே நமக்கு ஒன்று புரியும்.. பாஜக இல்லாவிட்டால் தமிழ்நாட்டு அரசியலே இல்லை, திராவிட கட்சிகள் எல்லாமே பாஜகவுக்கு அடுத்துதான் என்ற ரீதியில்தான் பேட்டிகளை தந்து கொண்டிருந்தார்.. ஸ்டாலினையும் விடவில்லை.. அந்த பக்கம் காங்கிரஸையும் விடவில்லை.. விமர்சனங்களாலேயே எதிர்க்கட்சிகளை துளைத்தெடுத்தார்.. அவ்வளவு ஏன், எடப்பாடியைகூட எல்.முருகன் விடவில்லை.

காவி கொடி
"கோட்டையில் காவி கொடி பறக்கும்" என்று சீண்டினார்.. 70 சீட் தராவிட்டால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கெத்து காட்டினார்.. இப்படி பேசி பேசியே 20 சீட்களை பெறுவதற்கும் ஒரு மெகா திறமை வேண்டும்.. அந்த திறமை முருகனிடம் அபரிமிதமாகவே இருந்தது.. நோட்டாவையே தாண்டாத கட்சி என்று எள்ளி நகையாடப்பட்ட கட்சிதான் தமிழக பாஜக.. இதை முதன்முதலில் நொறுக்கி காட்டியவர் முருகன்..

சின்சியாரிட்டி
அதுமட்டுமல்ல, பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பல வருஷமாகவே பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில்தான், கடுமையான எதிர்ப்புகளுக்கு நடுவில், பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது.. இது டெல்லி தலைமையையே சந்தோஷப்படவும் வைத்தது.. இதனால் வியந்துபோன அமித்ஷாவும், மோடியும், முருகனை பாராட்டியதாகவும் செய்திகள் வந்தன.. 20 வருஷத்துக்கு பிறகு, அக்கட்சியின் கனவு நினைவாகியது.. இதற்கு அடிப்படை காரணம் முருகன்தான்.. இன்று மத்திய அமைச்சர் பதவி முருகனுக்கு கிடைத்ததற்கு காரணமே, அவரது உழைப்பு + சின்சியாரிட்டிதான்..!

வேல்யாத்திரை
ஆறுபடை வீடுகளுக்கும் சென்று அவர் நடத்திய வேல் யாத்திரையும், அதையொட்டி சோஷியல் மீடியாவில் நடந்த சர்ச்சைகளும், கருத்துக்களும் என பாஜகவை பற்றி பிறர் பேசும் அளவுக்கு பரபரப்பாகவே வைத்திருந்தார். .. இந்த பரபரப்பையும் தன்னுடைய சட்டமன்ற தேர்தலுககு சாதுர்யமாக பயன்படுத்தி கொண்டார்.. அதுபோலவே கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தன் கட்சி இருத்தலையும் நியாயம் செய்தார்.
-
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
கடலூர் மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல்












Click it and Unblock the Notifications