அதிமுகவுக்கே பாஜக தான் சீட் ஒதுக்கும் போலயே.. NDA கூட்டணி சலசலப்பு.. வெடி வீசிய பெ.சண்முகம்!
சென்னை: "கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை. போற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என சிபிஐஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக அணியில் தேமுதிக இணைந்ததை வரவேற்கிறோம். சட்டமன்ற தேர்தலில் போடியிடும் தொகுதியை குறைத்துக்கொள்ள வேண்டும் என எங்களிடம் திமுக தலைமை தெரிவிக்கவில்லை. அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த முறை தொகுதிகளை குறைத்துக்கொண்டு போட்டியிட்டோம்.

இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் மாநிலக்குழு முடிவு. ஆகவே இரட்டை இலக்க தொகுதிகளை இம்முறை கேட்டுப் பெறுவோம். காங்கிரஸ், திமுக அணியை விட்டு வெளியேற கடுகளவு வாய்ப்பு கூட கிடையாது. இந்தியா கூட்டணி தொடர வேண்டுமெனில் காங்கிரஸ், இந்த அணியில் தான் இருந்தாக வேண்டும்.
சீட்டுகளை கூடுதலாக கேட்பது அந்தந்த கட்சியின் முடிவு. காங்கிரஸ் இந்த கூட்டணியில் நீடிப்பது கூட்டணிக்கு நல்லது. காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. எங்கள் பேச்சுவார்த்தை பாஜக உடன் தான், அதிமுகவுடன் இல்லை என டிடிவி தினகரன், ஜி.கே வாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே இது இயற்கையாக உருவான கூட்டணி இல்லை என தெரிகிறது.
இதிலிருந்தே இந்த கூட்டணி கட்டாயத்தின் பேரில் உருவானது என தெரிகிறது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை எனக்கூறி வருகிறார். ஆனால், அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை. போற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்தது முதலே திமுக மீது விமர்சனம் வைத்து வருகிறார். அதை அவர் கடந்த 2ஆண்டுகளாக செய்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்திப்போம் என விஜய் கூறுகிறார். ஒருவேளை விஜய் தோல்வி அடைந்தால் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாரா? கரூர் துயர சம்பவத்தில் தார்மீக பொறுப்பை விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும். தப்பித்து செல்வது தலைவனுக்கு அழகல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications