அண்ணாமலை மீது பொய் வழக்கு..பொங்கிய பாஜக.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை: திமுக அரசை கண்டித்து இன்று வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதன்படி, மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அறப்போராட்டம்
திமுக அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் அண்ணாமலை, அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சிறையைக் காட்டி மிரட்டுகிறார்கள். திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் விமர்சித்து இருந்தார். தொடர்ந்து திமுக அரசைக் கண்டித்து இன்று அறப்போராட்டம் பாஜக சார்பில் நடைபெற இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆதாரம் இல்லாத வழக்குகளை..
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டு இருந்த அறிக்கையில்:- மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் மாற்றுக் கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நோக்குடன், அச்சுறுத்தி அடக்கு முறையால் பணியவைக்க ஆளும் திமுக நினைக்கிறது. ஆகவே, அவசரகதியில், ஆதாரம் இல்லாத வழக்குகளை அடுக்கடுக்காய் தொடுத்து, தன் ஜனநாயக கடமை ஆற்றும் மாற்றுக் கட்சித் தலைவர்கள் எல்லாம் தொடர் வழக்குகளால் மிரட்டப் பார்க்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க
ஆட்சிமன்றம் கையில் இருப்பதினால், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதா?.திறனற்ற திமுக. ஆட்சியில், திரும்பிய திசைகள் எல்லாம், திக்கற்ற நிலையில் நிற்கிறது தமிழகம். ஆனால் செய்ய வேண்டிய மக்கள் பணிகளைச் செய்யாத திமுக எதிர்க்கட்சிகளை மிரட்டும், எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்கிறோம். ஆளும் கட்சியினரால், தொடங்கப்பட்ட வடமொழி எதிர்ப்பு கோஷங்கள். அதில் போடா என்ற சொல், விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசி விட்டார்கள் என்ற பரபரப்பை கிளப்பி, அப்படிப் பேசிய பாதுகாப்பு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய கோபம், திருப்பூரில் நிகழ்ந்த மோதல், இப்படி கிளப்பி விடப்பட்ட, வடக்கு தெற்கு வெறுப்புணர்வும் வன்மமும், தேச ஒற்றுமைக்கு பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற கடமை உணர்வின் அடிப்படையில், பொது நீதிக்காக குரல் கொடுத்து அறிக்கை விட்டதற்காக, பொய் வழக்கு போடுகிறார்கள்.

வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்
அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சிறையைக் காட்டி மிரட்டுகிறார்கள். திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பா.ஜ.க. தொண்டனும் வழக்குக்கும், சிறைக்கும் அஞ்சுவதில்லை. நியாயத்திற்காகப் போராடினால் பொய் வழக்கா? என்ற கேள்வியுடன் திறனற்ற திமுக. ஆட்சியின் அராஜகப் போக்கை எதிர்க்கிறோம். பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, மற்றும் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ள, சென்னை பெருங்கோட்டத்திற்குட்பட்ட பாஜக மாவட்ட நிர்வாகிகள், எழுச்சியுடன் முன்னெடுக்கும் அறப்போராட்டம் இன்று நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!











Click it and Unblock the Notifications