சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காரைக்குடியில் மீண்டும் களமிறங்கும் ஹெச் ராஜா.. 2001இல் செய்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவாரா?

Google Oneindia Tamil News

சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தத் தேர்தலுக்குத் தேவையான பணிகளை அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் அதிமுக, பாமக ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது.

பாஜகவின் முன்னாள் நிதியமைச்சரை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ்... கலகத்தில் பாஜகபாஜகவின் முன்னாள் நிதியமைச்சரை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ்... கலகத்தில் பாஜக

வேட்பாளர் தேர்தலில் மும்முரம்

வேட்பாளர் தேர்தலில் மும்முரம்

தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் அனைத்து முக்கிய கட்சிகளும் ஆர்வம் காட்டின. இதுவரை அதிமுக மூன்றுகட்டங்காளாக தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. திமுக ஒரு கட்டமா வெள்ளிக்கிழமை வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதேபோல பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளை தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

பாஜகவில் இழுபறி

பாஜகவில் இழுபறி

இருப்பினும், பாஜக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 20 பேரை தேர்வு செய்வதில் இழுபறி நிகழ்ந்தது. வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நள்ளிரவைத் தாண்டி ஆலோசனை

நள்ளிரவைத் தாண்டி ஆலோசனை

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் டெல்லி சென்றிருந்தார். நள்ளிரவைத் தாண்டி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக ஆறு பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது.

பாஜக திட்டம்

பாஜக திட்டம்

இதில் வானதி சீனிவாசன், ஹெச் ராஜா உள்ளிட்டோருடன் குஷ்பு, கவுதமி ஆகிய திரை பிரபலங்களையும் களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், வெள்ளிக்கிழமை பாஜக சார்பில் போட்டியிட திருநெல்வேலி போட்டியிட நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

காரைக்குடியில் ஹெச் ராஜா

காரைக்குடியில் ஹெச் ராஜா

இதில் காரைக்குடி தொகுதியில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா போட்டியிடுகிறார். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு காரைக்குடி தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல திருநெல்வேலி தொகுதியில் யார் வேட்பாளர் என்று இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP to release its candidate list for Tamilnadu today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X