Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தொகுதி மாறி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த லிஸ்ட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்பட பல தலைவர்கள் உள்ளனர். அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும் தற்போது வரை உடன்பாடு ஏற்படவில்லை.

bjp-top-leaders-from-annamalai-to-nainar-nagendran-likely-to-change-their-assembly-constituency

நேற்றைய தினம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 4 நாட்களில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்பட அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிக்கப்படும் என்று அமித்ஷா சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 29 முதல் 31 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தில் பாஜக முக்கிய தலைவர்கள் தற்போது தொகுதி மாற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் உள்ளனர்கள்.

நயினார் நாகேந்திரன்

அதன்படி பாஜக மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் தற்போது திருநெல்வேலி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் தேவர், நாடார், பிள்ளை, தலித் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் தான் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயம் செய்கின்றனர். இவர்களிடம் நயினார் நாகேந்திரனுக்கு நற்பெயர் உள்ளது.

இருப்பினும் தற்போது நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக உள்ளதால் அவருக்கு இஸ்லாமியர்களின் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் தென்மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். இதனால் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியை மாற்றும் முடிவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நயினார் டார்க்கெட்டில் சாத்தூர்

அதன்படி நயினார் நாகேந்திரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதியில் களமிறங்குவது பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நயினார் நாகேந்திரன் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர் சாத்தூர் தொகுதியிலும் தேவர் சமுதாய ஓட்டுகள் உள்ளன. இதனால் சாத்தூர் தொகுதியை தேர்வு செய்வது பற்றி நயினார் நாகேந்திரன் பரிசீலனை செய்து வருகிறார்.

மேலும், சாத்தூர் தொகுதி எம்எல்ஏவாக தற்போது திமுக கூட்டணியில் மதிமுகவின் ரகுராமன் உள்ளார். இந்த முறையும் அந்த தொகுதியை மதிமுக கேட்டு பெறலாம். இதனால் சாத்தூரில் போட்டியிட்டால் ஜாதி பலம், பாஜக - அதிமுக செல்வாக்கு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெல்லலாம் என்று நயினார் நாகேந்திரன் கணக்கிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவையை நோக்கி அண்ணாமலை

அதேபோல், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை அவர் கோவை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அண்ணாமலை கோவையில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு 4.50 லட்சம் ஓட்டுகள் வரை கிடைத்தது.

இதனால் அவர் கோவையில் ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர் உள்ளிட்ட தொகுதிகளை அண்ணாமலை குறிவைப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒன்றில் அவர் களமிறங்க முயற்சிக்கிறார்.

வானதி சீனிவாசன்

அதேபோல் கோவை தெற்கு தொகுதியி்ன் எம்எல்ஏவாக வானதி சீனிவாசன் உள்ளார். இவர் கடந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி எம்எல்ஏவானார். ஆனால் இந்த முறை அவர் தனது தொகுதியை மாற்றி நினைக்கிறார். கோவை தெற்கிற்கு பதில் கோவை வடக்கு தொகுதியை வானதி சீனிவாசன் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அண்ணாமலை , வானதி சீனிவாசன் ஆகியோரின் ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுகவினர் வெற்றி பெற்றனர். கோவை தெற்கில் வானதி சீனிவாசன் வென்றார். ஆனால் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களின் தொகுதிகளை குறிவைப்பதால் எடப்பாடி பழனிச்சாமி அதனை விட்டு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழிசை சவுந்தரராஜன்

அதேபோல் பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை அவர் தி.நகர் தொகுதியை குறிவைத்தார். ஆனால் அந்த தொகுதியில் அதிமுக மாவட்ட செயலாளர் பி சத்தியநாராயணன் விரும்புகிறார். இதனால் தமிழிசை சவுந்தரராஜன் மயிலாப்பூர் சட்டசபை தொகுதியை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் மயிலாப்பூர் தொகுதியின் பாஜக பொறுப்பாளராக உள்ள நிலையில் அங்கு களப்பணியை தொடங்கி உள்ளார்.

இந்த தொகுதியில் பிராமணர்கள், வன்னியர்கள் கணிசமாக உள்ளனர். அதேபோல் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். தமிழிசை சவுந்தரராஜனும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் ஓட்டை பெற முடியும் என்று நினைக்கிறார். அதேபோல் பாஜக என்பதால் பிராமணர்கள் ஓட்டுகளும், அன்புமணி ராமதாஸின் பாமக கூட்டணியில் உள்ள வன்னியர்கள் ஓட்டும் எளிதாக கிடைக்கும் என்று கணக்கிட்டு தமிழிசை சவுந்தரராஜன் தொகுதியில் தீவிர பணியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொன் ராதாகிருஷ்ணன்

அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபை தேர்தலில் களமிறங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி லோக்சபா எம்பியாக 2014ல் வென்ற இவர் மத்திய இணை அமைச்சர் ஆனார். அதன்பிறகு கடந்த 2019, 2021 (இடைத்தேர்தல்), 2024ல் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதனால் அவர் வரும் தேர்தலில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார். இங்கு நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். பொன் ராதாகிருஷ்ணனும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த தொகுதியை தேர்வு செய்துள்ளார்.

தற்போது நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏவாக பாஜகவின் எம்ஆர் காந்தி உள்ளார். இவருக்கு பதிலாக பொன் ராாதாகிருஷ்ணன் களமிறங்க திட்டமிட்டு வருகிறார். மேலும்பொன் ராதாகிருஷ்ணனுக்கு இந்த தொகுதி என்பது புதிது அல்ல. இவர் கடந்த 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு தேசிய அரசியலுக்கு சென்றதால் பாஜகவில் எம்ஆர் காந்தி 2016ல் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 2021ல் வெற்றி பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+