இப்போதைக்கு இதை பேச வேண்டாம்.. டெல்லியில் வானதி செய்த மூவ்.. அப்படியே ஆப் செய்த அமித் ஷா?
சென்னை: தமிழக சட்டமன்ற பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் மாநில தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், சட்டமன்ற பாஜக தலைவர் பதவியும் அவரிடம் இருப்பதால், ஒருவருக்கு ஒரு பதவி என்பதை நிலை நிறுத்தும் வகையில் சட்டமன்ற பாஜக தலைவர் பதவியை மாற்றியமைக்க வேண்டும் என்று பாஜகவில் ரகசிய குரல் எழுந்து வருகிறது.
குறிப்பாக, அந்த பதவியில் உட்கார, பாஜக எம்.எல்.ஏ.வும் பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவியான வானதி சீனிவாசன் முயற்சிக்கிறார். இதற்காக, ஜே.பி.நட்டாவிடம் அவர் பேசியிருப்பதாக தகவல் கிடைக்கிறது.

என்ன பேசினார் வானதி?
நயினார் தரப்பில் விசாரித்தபோது, ''அண்ணன் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டதுமே, அடுத்து அவரது இந்த பதவிக்கு ( சட்டமன்ற பாஜக தலைவர் ) குறி வைப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், மாநில தலைவர் பதவிக்கு நாமினேட் செய்த பிறகு, அமீத்சாவிடம் பேசிய நயினார், சட்டமன்ற பாஜக தலைவர் பதவியிலும் நான் இருக்கிறேன். அதனை ராஜினாமா செய்திடவா? என கேட்டிருக்கிறார். அதற்கு அமித் ஷா, அதை இப்போது விவாதிக்கத் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.
இதை மனதில் வைத்து, இப்போதைக்கு தேவையில்லை என்பதால் ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்த பதவி மாற்றியமைக்கப்படலாம் என யோசித்துத்தான் இப்போதே அந்த பதவியை நோக்கி காய்நகர்த்துகிறார் வானதி. ஆனால், ஒருவருக்கு ஒரு பதவிதான் என பாஜகவில் எந்த சட்டமும் இல்லை. டெல்லி யிலிருந்து உத்தரவு வராதவரை சட்டமன்ற பாஜக தலைவர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது'' என்கின்றனர்.
நயினார் பிளானிங்
பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி ரீதியாக எந்த தலைவர் வந்தால் தனக்கு ஏற்ற நிர்வாகிகளை நியமிப்பது வழக்கம். அதாவது கடந்த தலைவர் நியமித்த நிர்வாகிகளை மாற்றுவார்கள்.
அந்த வகையில் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற உள்ளார். அண்ணாமலைக்காக பணியாற்றிய.. கட்சியில் மற்ற தலைவர்களை மதிக்காத சில நிர்வாகிகளை கூண்டோடு தூக்கும் திட்டத்தில் நயினார் இருக்கிறாராம்.
அதோடு ஜாதி ரீதியாக பரவலாக பல தரப்பினருக்கு பதவி வழங்கவும் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம். ஒரு சிலர் இன்னமும் முன்னாள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதால் அவர்களை தூக்கும் திட்டத்திலும் நயினார் இருக்கிறாராம்.
சென்னையில் ரவுடிகள் பலர் கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் உள்ளன. இதை கணக்கெடுப்பு மேற்கொண்டு சரி செய்ய.. பலரை நீக்கவும் நயினார் திட்டமிட்டு உள்ளாராம். பாஜகவின் பல வருட திட்டம் பூத் கமிட்டி அமைப்பது. அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் 2026 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம்.
இதை மனதில் வைத்தே கட்சியில் நிர்வாகிகள் குழு, மாவட்ட தலைவர்கள் குழு விரைவில் கூண்டோடு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதை எல்லாம் மே இறுதிக்குள் செய்யும் திட்டத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளாராம்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications