மேடையில் ஏறி பார்க்கட்டும்! அண்ணாமலையை விளாசிய கீதா ஜீவன்.. குறுக்கே வந்த பாஜக நாராயணன் திருப்பதி!
சென்னை : தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பொது கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசியதோடு, "சூடு, சொரணை இருந்தால், என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறுவோம் என்று மிரட்டல் விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு எரிமலையாக வெடித்து வருகிறது. அண்ணாமலையின் வாட்ச் குறித்த விவாதம் அரசியல் களம் மட்டுமல்லாது சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்து இருக்கிறது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது அமைச்சர் கீதா ஜீவன் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்.

கீதா ஜீவன்
நேற்று பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் வேலையை செய்ய முடியாமல் அரசியலுக்கு வந்தவர் எனவும் அவர் அரசியலுக்கு வந்து வருடம் தான் ஆகிறது. போலியான புகைப்படங்களை வைத்து அண்ணாமலை அரசியல் செய்கிறார் இதோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர் பேசும் மேடையில் ஏறி நாங்கள் பேச வேண்டி வரும் என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அண்ணாமலை
இந்நிலையில் தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பொது கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்," தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பொது கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசியதோடு, "சூடு, சொரணை இருந்தால், என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறுவோம் என்று மிரட்டல் விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாராயணன் திருப்பதி
அதிகார மமதையில் ஒரு அமைச்சர், அரசியல் கட்சி தலைவர் ஒருவரை மேடையில் ஏறி தாக்குவோம் என்று கூறியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து கொண்டிருப்பதற்கு காரணம் ஆளும் கட்சியும், அமைச்சர்களும் தான் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஏற்கனவே, சில அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டு கொள்ளாத தமிழக அரசு, காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண் அமைச்சரின் இந்த பேச்சுக்கும் கை கட்டி, வாய் பொத்தி மௌனம் காப்பது முறையல்ல.

தமிழக பாஜக
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கீதா ஜீவன் அவர்களே,கடமை தவறி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தொனியில் பேசியுள்ள நிலையில்,அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.மேலும், பொது வெளியில் பொறுப்புள்ள கட்சிதலைவர் ஒருவரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும்.இல்லையேல், சவால் விடுகிறேன், அவர் எந்த இடத்தில் அண்ணாமலை அவர்களை மிரட்டினாரோ, நான் அதே இடத்தில் தமிழக பாஜக பொது நடத்தும் கூட்டத்தில், தமிழக அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள், முறைகேடுகள் குறித்தும், தி மு கவின் அராஜகம் குறித்தும் மக்களிடையே எடுத்து சொல்கிறேன்.

சவால்
அமைச்சர் கீதா ஜீவன் கூறிய அதே வார்த்தைகளின் படி, தி மு க வினருக்கு சூடு, சொரணை இருந்தால், தைரியம் இருந்தால் மேடையில் ஏறி பார்க்கட்டும். தி மு க ஆண்டு கொண்டிருப்பது தமிழக மாநிலத்தை. ஆனால், பாஜக ஆள்வது இந்திய நாட்டை என்பதை தி மு க வினர் மறந்து விட வேண்டாம்" என பதிவிட்டுள்ளார். இதனால் பாஜக தலைவர்கள் திமுக அமைச்சர்கள் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை மோதல் போக்கை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?












Click it and Unblock the Notifications