Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“டபுள் மீனிங்”.. நயன்தாராவுக்கு 4 மாதத்தில் 2 குழந்தை.. பாஜக விபி துரைசாமிக்கு வலுக்கும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாடகைத் தாய் விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நடிகை நயன்தாராவை இரட்டை அர்த்தத்தில் விமர்சித்து பேசியது கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

தாய்மொழிக்கு திமுக அரசு முடிவுரை எழுத முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டார்.

வி.பி.துரைசாமி பேச்சு

வி.பி.துரைசாமி பேச்சு

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வி.பி.துரைசாமி, "கோவை குண்டு வெடிப்பு பற்றி விசாரிக்க குழு அமைக்காத திமுக அரசு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் முறைப்படி குழந்தை பெற்றதை விசாரிக்க குழு அமைத்து உள்ளது. நான் 1972 ஆம் ஆண்டில் இருந்து சென்னையில் இருக்கிறேன்.

திராவிட மாடல்

திராவிட மாடல்

அப்போது இங்கு வீடு வாடகைக்கு கிடைக்கும் என்று டூலட் போர்டு தொங்கும். ஆங்கு இங்கு நுங்கம்பாக்கம் பக்கம் சென்றால் வாடகைத் தாய் கிடைக்கும் என்று போடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு எவ்வளவு பெரிய திராவிட மாடல் பாருங்க. எவ்வளவு பெரிய புரட்சி செய்து இருக்கிறது.

9 தாரா

9 தாரா

வாடகைக்கு வீடு என்பதை காட்டிலும் வாடகை தாய் இவ்விடத்தில் கிடைக்கும் என்பதுதான் நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது பெரிய மருத்துவமனை. நடிகை நயன்தாராவுக்கு... இப்படி சொல்வதற்கு பதில் 9 தாரா என்றே தமிழில் சொல்லிவிடலாம்." என்று இரட்டை அர்த்தத்தில் அவர் பேச மேடையில் அவரோடு நின்றவர்கள் சிரித்தார்கள்.

4 மாதத்தில் குழந்தை

4 மாதத்தில் குழந்தை

9 தாராவுக்கு 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்தது எப்படி என்பது பற்றி விசாரிக்க வேண்டும். அதுவும் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை பார்க்கையில் வேடிக்கையாக உள்ளது. விக்னேஷ் சிவன் லால்குடி. நம்ம ஏரியாதான். நன்றாக இருக்கட்டும். அவர் மீதெல்லாம் எனக்கு பொறாமை இல்லை." என்றார்.

கண்டனம்

வி.பி.துரைசாமியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எழுத்தாளர் ஷாலின் மரியா லாரன்ஸ், "மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான வெறுப்பு பாஜகவுக்கு புதிதல்ல. மீண்டும் மீண்டும் விஷத்தை உமிழ்கிறது. 2 நாட்களில் 2 கட்சிகளிடம் இருந்து பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் வந்துள்ளன. தமிழ்நாடும் அதன் ஆணாதிக்கமும்." என்று விமர்சித்துள்ளார். -

நயன் - விக்னேஷ் தம்பதி

நயன் - விக்னேஷ் தம்பதி

சென்னை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து உள்ளதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

வாடகைத் தாய்

வாடகைத் தாய்

இந்த நிலையில், வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சட்ட விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டினர்.

குழு அமைத்து விசாரணை

குழு அமைத்து விசாரணை


இந்த விவகாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வரை சென்றது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றது தொடர்பாக விசாரணையும் நடைபெற்றது.

விதிமீறவில்லை

விதிமீறவில்லை

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில் விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகியானது. அதில், "நயன்தாரா - விக்னேஷ் சிவன் விதிமீறவில்லை. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிகளின்படியே வாடகைத் தாய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+