பாஜகவினர்லாம் பேசலாமா.. சட்டசபையிலேயே ஆபாச படம் பார்த்தவர்கள்தானே.. ஜோதிமணி கடும் தாக்கு
சென்னை: ‛‛சட்டசபையில் ஆபாசப்படம் பார்க்கும் பாஜகவினரை போல் எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை'' என கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பாஜகவினரை விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
உத்தர பிரதேசம் உள்பட 4 மாநிலங்களிலும் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்ததால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

காங்கிரஸ் தீவிரம்
இந்த தொடர் தோல்வியால் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை பலப்படுத்தும் செயலில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பல ஆலோசனைகளை வழங்கினார். அவரை கட்சியில் இணைக்க நடந்த முயற்சி தோல்வியடைந்தது. ஆனாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 2024ம் மக்களவை தேர்தலை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறது.

ராகுல்காந்தி கிளப் வீடியோ
ராகுல்காந்தியும் அடிக்கடி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த விமர்சனங்களை புள்ளிவிபரமாக அவர் குறிப்பிட்டு வருகிறார். இந்நிலையில் தான் ராகுல்காந்தி நேபாளத்தில் உள்ள நைட் கிளப்பில் பார்ட்டியில் பங்கேற்ற வீடியோ, படங்கள் நேற்று வெளியாகின. இதையடுத்து பாஜகவினர் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கு காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நேபாளத்தில் நடந்த தோழியின் திருமண விழாவில் ராகுல்காந்தி பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

ஜோதிமணி விமர்சனம்
இந்த விவகாரத்தில் கரூர் எம்பி ஜோதிமணி களமிறங்கி பாஜகவினரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛சட்டமன்றத்தில் ஆபாசப்படம் பார்க்கும், காஷ்மீரில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கு ஆதரவாக தேசியகொடியேந்தி ஊர்வலம் போகும் பாஜக, நண்பரின் திருமண விருந்தில் ராகுல்காந்தி கலந்து கொள்வதை விமர்சிப்பதை விட அவலம் வேறில்லை. உங்களை போல மூடி மறைக்க வேண்டிய எதையும் நாங்கள் செய்வதில்லை'' என கூறியுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின்
இதேபோல், வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரினும் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛அரசியல்வாதியாக இருக்கும் நபர் நைட் கிளப்புக்கு செல்வதில் தவறு எதுவும் இல்லை. பார்லிமென்டில் ஆபாசபடம் பார்ப்பதை விட இது மோசமானது இல்லை'' என கூறியுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications