முதல்வர் ஸ்டாலினுக்கே வெற்றி.. 4 எம்எல்ஏக்கள்.. அண்ணாமலையால் பாஜக இல்லாமல் போகும்: கி.வீரமணி
பாஜக அண்ணாமலையை திராவிடர் கழக தலைவர் கி வீரமணி விமர்சித்துள்ளார்
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அதிமுக உதவியுடன் பாஜக பெற்ற 4 இடங்களையும் இல்லாமல் செய்து விடும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது... இதில் அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்பித்தார்..
இந்த செயற்குழுவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக
மேலும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய திமுக ஆட்சிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் மருத்துவ முதுநிலை, உயர்சிறப்பு மேற்படிப்புகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு நீட் தேர்வுக்கு முன்னதாக வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு மீண்டுன் கொண்டு வர வேண்டும், தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து அல்லது விலக்கு பெற வேண்டும் என மொத்தமாக 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பேட்டி
இந்த நிகழ்ச்சி பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேசியபோது, கி.வீரமணி சொன்னதாவது: "பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் அதிமுக உதவியுடன் பாஜக பெற்ற 4 இடங்களையும் இல்லாமல் செய்து விடும்... தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்காத திமுக அரசை கலைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.. முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம் என்று சொன்னது ஒன்றிய அரசுதான்..

ஸ்டாலின்
அதனால் ஒன்றிய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பிறகு தமிழ்நாடு பக்கம் வரட்டும். அப்படி தமிழ்நாட்டில் மறுபடியும் தேர்தல் நடைபெற்றால், எதிர்கட்சியே ஆளுங்கட்சியாக செயல்படும் நிலையில், எதிர்கட்சி இல்லாமல் மீண்டும் முக ஸ்டாலினே வெற்றி பெறுவார்.
Recommended Video

நீட் போராட்டம்
நீட் தேர்வு விவகாரத்தில் கல்வி ஒத்திசைவு பட்டியலில் உள்ளதால், தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசே இறுதி முடிவை எடுக்கலாம். நீட் போராட்டத்தில் இறுதியில் முத்துவேல் கருணாநிதியே வெற்றி பெறுவார். அனைத்து அரசும் உருவாக்க தனியாக அமைச்சகம் உருவாக்கும் நிலையில், பாஜக அரசில் தான் விற்பதற்கு, அடமானம் வைப்பதற்கு தனியாக அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது...

வரவேற்பு
இதன் மறைமுக நோக்கம் இடஒதுக்கீட்டை ஒழித்து சமூக நீதியை அழிப்பதே ஆகும்.. அதனால் அகில இந்திய அளவில் தனியார் துறையில் இடஒதுக்கீடை கொண்டு வர வேண்டும் என்ற முன்னெடுப்பை திராவிடர் கழகம் முன்னெடுக்கும். பெரியார் உலகம், அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம், வ.உ.சி. பெயரில் விருது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications