குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக ஆட்சிக்கு வராது..அண்ணாமலைக்கு அதிகாரம் கிடைக்காது..சேகர்பாபு நச் பதில்
சென்னை: எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. இது திராவிட மண் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கும் அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தை மக்கள் அளிக்க மாட்டார்கள் என்றும் சேகர்பாபு கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். அதை பலமுறை பாஜக தலைவர்கள் பேசியுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாஜக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நாள் இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள் என்று கூறினார்.

ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அதே போல பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கோவில் முன் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் சிலை அகற்றப்படும். கடவுளை நம்புபவன் முட்டாள் என சொல்லியவரின் சிலைகள் அகற்றப்படும். அதற்கு பதிலாக ஆழ்வார்கள் நாயன்மார்கள், தமிழ் புலவர்கள், திருவள்ளுவர் சிலை அங்கு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் பாஜக ஆட்சி வந்ததும், பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சேகர்பாபு, திமுகவை பொறுத்தவரை ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒன்று சேரந்திருப்பது தமிழ்நாடு . இதில் பெரியார் கொள்கை ஏற்று கொள்ளப்பட வேண்டியவை, இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
முதல் கையெழுத்து என்று சொல்பவர் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்குமே தவிர தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை குட்டி கரணம் அடித்தாலும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. எத்தனை ஐடி ரெய்டு, எத்தனை இடி ரெய்டு நடத்தினாலும் சரி, பாஜக ஆட்சி வராது என்றார். இது திராவிட மண் என்று கூறிய சேகர்பாபு, கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கும் அண்ணாமலை போன்றவர்களுக்கு அதிகாரத்தை மக்கள் அளிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!











Click it and Unblock the Notifications