தவெக விஜய் அரசு மீது நம்பிக்கை தீர்மானத்தில் பாஜக நடுநிலை.. போஜராசன் எம் எல் ஏ அறிவிப்பு ஏன்
சென்னை: இன்றைய தினம் முதல்வருடைய நம்பிக்கை தீர்மானத்தில் பலர் துரதிஷ்டவசமாக , இது எதோ பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான பிரச்சாரக்கூட்டமாக மாண்பை மீறி பேசி விட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த மன்றத்தின் மரபை கருதி, அந்த கருத்துக்களை எல்லாம் நேரமும் காலமும் வரும் போது, நானும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுடைய கட்சி நிலைப்பாடு .. நாங்கள் நடுநிலைமை வகிக்கிறோம் என்று பாஜக எம்எல்ஏ போஜராசன் கூறினார்.
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே ,மாண்புமிகு முதல்வர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, எதிர்க்கட்சி தலைவர்களே, சபையில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் பாஜக சார்பில் வணக்கங்களை தெரிவிக்கிறேன். இன்றைய தினம் முதல்வருடைய நம்பிக்கை தீர்மானத்தில் பலர் துரதிஷ்டவசமாக , இது எதோ பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான பிரச்சாரக்கூட்டமாக மாண்பை மீறி பேசி விட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த மன்றத்தின் மரபை கருதி, அந்த கருத்துக்களை எல்லாம் நேரமும் காலமும் வரும் போது, நானும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். ஒரு நண்பர் சொன்னார்கள் ஒற்றை தாமரை என்று..

நாட்டில் இரண்டே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் இருந்தார்கள். இன்று இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கிறது. ஆனால் எங்கள் கட்சியை இங்கு (தமிழ்நாட்டில்) கால் ஊன்றாது , கால் ஊன்றாது என்று சொல்கிறீர்கள்... நல்ல திட்டங்களுக்கு எங்களது தன்னிகரற்ற தலைவர் , உலகம் போற்றும் உத்தமர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தின் பால் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக , தமிழக அரசை எப்போதும் நல்ல பணிகளுக்கு நிச்சயமாக ஆதரவாக இருப்பார்கள்.. எங்களுடைய கட்சி நிலைப்பாடு .. நாங்கள் நடுநிலைமை வகிக்கிறோம் என்பதை மட்டும் கூறிக்கொண்டு எனது உரையை முடிக்கிறேன் நன்றி வணக்கம்" இவ்வாறு ஊட்டி பாஜக எம்எல்ஏ போஜராஜன் கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
சட்டசபையில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவளிப்பதாக சட்டசபையில் உறுதி அளித்துள்ளன. தேமுதிக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக நடுநிலைமை வகிப்பதாக அறிவித்துள்ளது. பாஜக ஒருவேளை தீர்மானத்தை எதிர்த்தால் அது திமுக உடன் சேர்ந்து எதிர்த்தது போல் ஆகும். ஆதரித்தால் காங்கிரஸ் உடன் சேர்ந்து தவெக அரசை ஆதரித்தது போல் ஆகும் என்கிற திரிசங்கு நிலையில் பாஜக இருக்கிறது. இந்த சூழலில் தான் தவெக அரசுக்கு ஆதரவும் இல்லை.. எதிர்ப்பும் இல்லை .. நாங்கள் நடுநிலை என்று பாஜக எம்எல்ஏ அறிவித்துள்ளார்.
அதிமுகவை பொறுத்தவரை இரண்டு பிரிவாக பிரிந்து நிற்கிறார்கள். சிவி சண்முகம், வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி, லீமா ரோஸ் உள்பட சுமார் 30 பேர் தவெகவிற்கு ஆதரவளிக்க போவதாக கூறியிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பார்களா அல்லது புறக்கணித்து விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications