அடிச்சிக்கோங்க.. சாட்டையை சுழற்ற போகும் "ரிங் மாஸ்டர்".. அதிமுக மோதலில் கிளைமேக்ஸ் "அப்போ" தானாமே!
சென்னை: அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் எப்போது முடிவிற்கு வரும், அதிமுகவில் பிரிந்து இருக்கும் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிவி தினகரன் போன்ற தலைவர்கள் சேர வாய்ப்பு உண்டா என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. அதிமுக பொதுக்குழு வழக்கு.. கிட்டத்தட்ட தமிழ் மெகா சீரியலை விட பெரிதாக.. மிக நீளமாக சென்று கொண்டே இருக்கிறது. இந்த வழக்கில் இந்த வருடம் தீர்வு கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது. ஜனவரி 4ம் தேதி இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை நடக்க உள்ளது .
இந்த மோதல்களுக்கு இடையில் இன்னொரு பக்கம் அதிமுக + பாஜக கூட்டணி முறிய போகிறது. காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க போகிறது. பாஜகவை கழற்றிவிட அதிமுக திட்டமிட்டுள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக திமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

பேட்டி
கேள்வி: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற விரும்பினாலும் அதற்கு பாஜக ஒப்புக்கொள்ளுமா?
பதில்: கண்டிப்பாக பாஜக ஒப்புக்கொள்வது. பாஜக அதற்கு அனுமதிக்காது. பாஜக இல்லாமல் நிற்க வேண்டும் என்று தொண்டர்கள் சிலர் கருதுகிறார்கள். ஏன் நிர்வாகிகள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் பாஜக இதற்கு அனுமதிக்காது. அதிமுக நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் பாஜகதான் கட்டுப்படுத்துகிறது. பாஜக வளர்ந்து இருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஆனால் எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்று தெரியாது. பாஜகவிற்கு அதிமுகவின் வாக்கு வங்கி முக்கியம். அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும். அவர்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

எடப்பாடி பிளான்
கேள்வி: ஒரு பக்கம் ஓபிஎஸ், இன்னொரு பக்கம் சிவி சண்முகத்தின் சமீபத்திய பேச்சுக்களை பார்த்தால் எடப்பாடி அதிமுகவில் வீக்காக இருக்கிறார் என்று சொல்லலாம்?
பதில்: சமீபத்தில் பொன்னையன் ஆடியோ வந்தது நினைவு இருக்கிறதா? அதில் யாருக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று பொன்னையன் வெளிப்படையாக பேசினார். சிவி சண்முகத்திற்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது. எடப்பாடிக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று பேசினார். சிவின் சண்முகத்திடம் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். முனுசாமியிடம் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருடமும் கட்சிக்குள் ஒரு அரசியலை செய்து கொண்டுதான் இருக்கிறார். என்ன வெளிப்படையாக எடப்பாடியை ஆதரிக்கிறார்களே ஒழிய உள்ளே அவர்கள் பவர் பாலிடிக்ஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள். சிவி சண்முகத்திற்கும் ஒரு பவர் இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க இந்த உட்கட்சி மோதல் என்ன ஆகும் என்று தெரிய வரும். 2024ல்தான் இந்த மோதலுக்கு கிளைமேக்ஸ் வரும். பாஜகவிடம்தான் இதில் சாட்டை உள்ளது. ரிங் மாஸ்டரான பாஜகவிற்குத்தான் என்ன நடக்கும் என்று தெரியும்.

சிவி சண்முகம்
கேள்வி: சிவி சண்முகத்திற்கு வட மாவட்டங்களில் பவர் இருப்பதாக சொல்கிறீர்கள்.. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக அங்கு சரியாக செயலாற்றவில்லையே.. கொங்கில்தானே அதிக இடங்களை வென்றது. அப்படி இருக்க சிவி சண்முகத்திற்கு எடப்பாடி ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்?
பதில்: சிவி சண்முகத்தை ஒதுக்கினால் அதிமுக மொத்தமாக வீக் ஆகும். வட மத்திய மாவட்டங்களில் அதிமுக வலிமை இழக்கும். வன்னியர் இடஒதுக்கீட்டால் சேலம், தர்மபுரியில் அதிமுக வென்றது. கொங்கில் வேலுமணி, தங்கமணி தயவால் அதிமுக வென்றது. சிவி சண்முகத்தை மொத்தமாக ஒதுக்கினால் அதிமுக வடக்கு, மத்திய தமிழ்நாட்டில் அதிமுக வலிமை இழக்கும். இந்த உட்கட்சி மோதல் எல்லாம் இப்போதைக்கு முடிவிற்கு வராது. பாஜக நினைத்தால் மட்டுமே உட்கட்சி மோதல் முடிவிற்கு வரும். திமுக + காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. அவர்களை எதிர்க்க வேண்டும் என்றால் அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக சேர வேண்டும். அதற்கு பாஜக மனது வைக்க வேண்டும்.

அதிமுக கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணியில் இல்லாமல் தனியாக நின்றாலும் கூட திமுகவிற்குத்தான் சாதகம். 2021 தேர்தலில் இருந்த கூட்டணியை மீண்டும் உருவாக்கவே பாஜக நினைக்கும். இப்போது திமுக ஆட்சி இருக்கிறது. பொதுவாகவே ஆட்சிக்கு எதிராக வாக்குகள் விழும். இந்த வாக்குகளை எல்லாம் தங்கள் பக்கம் இழுக்க பாஜக நினைக்கிறது. இப்போது அதிமுக ஒரு பக்கம் அடித்துக்கொண்டு இருக்கட்டும். அதற்குள் நாம் கட்சியை வளர்க்கலாம். தேர்தல் நெருங்கும் போது அதிமுகவில் எல்லோரும் ஒன்று சேர்த்துவிட்டு, அதன்பின் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்று பாஜக விட்டு பிடிக்க நினைக்கிறது. அதுவரை அதிமுகவில் உட்கட்சி மோதல் நடக்கத்தான் செய்யும்.

ரிங் மாஸ்டர்
கேள்வி: தேர்தல் வரை உட்கட்சி மோதல்களை எடப்பாடி சமாளித்துவிடுவாரா?
பதில்: அவர் கண்டிப்பாக சமாளிப்பார். அவர் ஓ பன்னீர்செல்வத்துடன் கூட சமாதானமாகி செல்ல தயார். நான்தான் பொதுச்செயலாளர். உனக்கு எந்த பதவி வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று எடப்பாடி சொல்கிறார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் இதை கேட்கவில்லை. இதுதான் மோதலுக்கு காரணம். வெளியே பார்த்தால் அவர்கள் சேர வாய்ப்பே இல்லை என்பது போல தோன்றும். ஆனால் அரசியலில் இதெல்லாம் சகஜம். இவர்கள் ஒன்று பட்டால் மட்டுமே அதிமுகவிற்கு வெற்றி. இல்லையென்றால் அதிமுக வெற்றிபெறவே முடியாது. அதிமுக ஒன்றுபட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அடுத்த சில காலம் அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்துதான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது.
-
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications