"நீ நூறுன்னா.. நான் 300".. பதிலுக்கு பதில் சவால் விட்ட யோகி.. மிரட்சியில் பாஜக.. அதிர்ச்சியில் ஓவைசி

உபியில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் வெடித்து கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டிதான் இந்திய அரசியலையே பரபரப்பாக்கி உள்ளது.. விரைவில் தேர்தல் நடக்க உள்ளநிலையில், யோகியின் இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவத்தையும் பெற்று வருவதுடன், சில சந்தேகங்களையும் நமக்கு எழுப்பி வருகிறது.

இந்துத்துவா சித்தாந்தத்தில் மிகுந்த பிடிப்பு உள்ளவர் யோகி ஆதித்யநாத்.. இதற்காகவே, இளைஞர்களை திரட்டி வலுப்படுத்தி தன்னுடைய சித்தாந்தத்தை ஆழமாக வேரூன்றியவர்..

இவருடைய தீவிர இந்துத்வா போக்கின் காரணமாகவே ஆர்எஸ்எஸ் இவரை தூக்கிக் கொண்டாடுகிறது. இதன் காரணமாக பாஜகவும் இவரை உயர்த்திப் பிடிக்கிறது.

யோகி

யோகி

கடந்த மாதம், திடீரென மோடிக்கும் யோகிக்கும் ஒரு விரிசல் வந்தது.. தனக்கு நெருக்கமான குஜராத் ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் குமார் ஷர்மா என்பவரை உபி சட்டமேலவை பாஜக உறுப்பினராக கொண்டு வர மோடி ஆசைப்பட்டார்.. அதற்கு யோகி மறுப்பு சொன்னார்.. காரணம், பிரதமர் மோடி தன்னை கண்காணிக்கவே இப்படி ஒரு நபரை உபிக்கு அனுப்புவதாக யோகி கருதியதுதான்.. யோகி இப்படி மறுப்பு சொன்னது, மோடி மட்டுமல்லாமல் அமித்ஷாவுக்கே ஷாக்.

யோகி

யோகி

இதுவரை மோடியை எதிர்த்து யாரும் பேசியதில்லை.. பிரதமர் ஒரு உத்தரவு போட்டால், அதை எதிர்க்கும் துணிச்சல் யாருக்குமே வந்ததில்லை.. முதல்முறையாக ஒரு பாஜக முதல்வருக்கு வந்ததுதான் ஆச்சரியமும்.. அதிர்ச்சியும்.. ஆனால் இவர்களுக்குள் பிரச்சனை வந்துவிட்டால், அது நிலைமையை மோசமாக்கிவிடும் என்றும் பாஜகவுக்குள் பிளவு வந்துவிடக்கூடாது என்றும் ஆர்எஸ்எஸ் தரப்பு நினைத்தது.. உடனடியாக இவர்கள் இருவரும் சந்திப்பு நடத்தி, பிரச்சனையை பேசி தீர்த்து கொண்டதாக கூறப்படுகிறது.

யோகி

யோகி

ஆனால், இந்த பிரச்சனை முழுவதுமாக தீர்ந்ததா? அல்லது மறைமுகமாக நீடிக்கிறதா? என்று தெரியவில்லை.. அதற்குள் இன்னொரு விஷயத்தை கொளுத்தி போட்டுள்ளார் யோகி.. இன்னும் சில மாதங்களில் அங்கு தேர்தல் நடக்க உள்ளது.. அதற்கான வேலைகளையும் யோகி ஆரம்பித்துவிட்டார்.. இதில் அசாதுதீன் ஓவைசி மிக தீவிரமாக களமிறங்கி உள்ளார்... பல்வேறு மாநிலங்களில் தங்களது செல்வாக்கை உயர்த்த தீவிரம் காட்டி வரும், ஒவைசி இந்த முறை உபியை குறி வைத்துள்ளார்.

பாஜக

பாஜக

உபியில் பாஜகவை திரும்பவும் ஆட்சியமைக்க விடமாட்டோம்... யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராவதை கடவுளின் பெயரால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.. 2022 சட்டமன்ற தேர்தலில் சங்கல்ப் மோர்ச்சா என்ற கூட்டணியில் இணைந்து ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடவுள்ளது... நான் 100 வேட்பாளர்களை நிறுத்த போகிறேன்" என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஒரு பேட்டியை தந்திருந்தார்.

ஓவைசி

ஓவைசி

இந்த பேட்டியை பார்த்த யோகி, ஓவைசிக்கு பதிலடி தந்துள்ளார்.. அதில், ஓவைசிக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறதுதான்.. அதனால், பாஜகவுக்கு அவர் விடுத்த சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்... ஆனால், ஒன்று, வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை... அதுவும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம்" என்றார். இந்த பேச்சு ஓவைசிக்கு நேரடியாக விடப்பட்ட சவால் என்றாலும், பாஜக மேலிடமும் சற்று ஜெர்க் ஆகிதான் போயுள்ளது..

போட்டி

போட்டி

காரணம் இதுபோல நடந்து விட்டால் அது யோகிக்கு கிடைத்த பெருமையாக மாறி விடும் என்பதால் பாஜக தலைவர்கள் பீதி அடைந்துள்ளனராம். இந்த அசுர வளர்ச்சியை பிரதமர் மோடி விரும்பவில்லை என்று ஒருசாரார் மறைமுகாக கருத்து தெரிவிக்கிறார்கள்.. குறிப்பாக, தனக்கு போட்டியாக யாரும் பாஜகவில் இருந்திடக்கூடாது என்பதிலும் மோடி கவனமாகவே இருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேசமயம், யோகியை முழுவதுமாக பகைத்து கொள்ள முடியாமல் இருக்கும் சூழல் பிரதமருக்கு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

மாநிலம்

மாநிலம்

ஆனால், பாஜகவில் இவருக்கு செல்வாக்கு வளர்கிறதா, மோடிக்கு பிடிக்கிறதா என்பதையும் தாண்டி, 300 சீட்களை யோகி வெல்வாரா என்ற சந்தேகமும் நமக்கு வருகிறது.. இந்த 6 மாதத்தில் எத்தனையோ அதிருப்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகிவிட்டார் யோகி.. இந்த கொரோனா நேரத்தில் உபி மாநிலத்துக்கு நிறைய கெட்ட பெயரும் வந்துவிட்டது..

 சடலங்கள்

சடலங்கள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மட்டுமே நூற்றுக்கணக்கான அப்பாவிகள் இறந்துவிட்டனர்.. சடலங்கள் கங்கையில் மிதந்தன.. அவைகளை நாய்கள் இழுத்து சென்று குதறின.. இந்த வீடியோவை பார்த்து மக்கள் பதறினர்... போதாக்குறைக்கு மாட்டிறைச்சி விவகாரம், கோமியம் விவகாரம், சாமான்ய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, ஏகப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் என உபியின் மீதான குறைகளுக்கு ஒரு அளவே இல்லை..

ராமராஜ்ஜியம்

ராமராஜ்ஜியம்

ராமராஜ்ஜியம் ஏற்படுத்தப்படும் என்று யோகி உறுதியாக சொன்னாரே தவிர, எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் இன்னமும் அப்படியேதான் நீங்காமல் உள்ளன.. அப்படி இருக்கும்போது 300 சீட்களை வெல்வாரா? மோடியின் ஆதரவு யோகிக்கு முழுமையாக கிடைக்குமா? அமித்ஷாவின் மாஸ்டர் பிளான் இதில் என்ன? என்பதெல்லாம் இனிமேல் தான் நமக்கு தெரியவரும்.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+