ராமநாதபுரத்தில் நிர்மலா சீதாராமன் பெயரில் சாலை? உண்மை நிலவரம் என்ன?
சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மத்திய நிதி அமைச்சரின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டனர். அந்த படத்தின் உண்மை தன்மை குறித்து நெட்டிசன்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.
பாஜக மாநில செயலாளர் ராமசீனிவாசன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பெயரில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை... பெரிய தாமரைக்குடி சின்ன தாமரை கொடி ஆகிய கிராமங்களுக்கு ரயில்வே மேம்பாலம் அமைத்துக் கொடுத்தார் மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்.... பல வருடங்கள் கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்த மக்கள் பிரச்சனையை ஒரே நாளில் ரயில்வே அமைச்சகத்துடன் பேசி செய்து கொடுத்தார் என்று பதிவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை... பெரிய தாமரைக்குடி சின்ன தாமரை கொடி ஆகிய கிராமங்களுக்கு ரயில்வே மேம்பாலம் அமைத்துக் கொடுத்தார் மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்.... பல வருடங்கள் கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்த மக்கள் பிரச்சனையை ஒரே நாளில்… pic.twitter.com/tS6vVj1HIg
— Raama Sreenivasan (@ProfessorBJP) December 26, 2023
நிதி அமைச்சர்.... கிராம மக்கள் தங்கள் ஊருக்குச் செல்லும் பிரதான சாலைக்கு நிதியமைச்சரின் பெயரை சூட்டி உள்ளார்கள்.... கிராம சபைக் கூட்டத்தில் மேடம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள் என்றும் ராம சீனிவாசன் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

ரயில்வே பாலத்திற்கும் மக்கள் வசிக்கும் பகுதிக்கும் நீண்ட தொலைவு உள்ளது. பாலம் கட்டபட்டுள்ளதா என தெற்கு ரயில்வே வலைதளத்தில் சரிபார்க்கவும் என்று கேட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

ராம்நாட்டுல லாந்தை இருக்கு. லாந்தையே சின்ன ஊர் தான் அதுல எங்க பெரிய தாமரைக்குடி சின்ன தாமரை கொடி ஊர் இருக்கு என்று கேட்டுள்ளார் ஒரு நெட்டிசன். ராம்நாட்டுல நீ சொல்ற ஊரே கிடையாது என்று கூறியுள்ளார் மற்றொரு நெட்டிசன்.

மக்கள் அரசியல் வாதிகளை புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ஒருவர்.

இதே போல ஒரு பதிவை பாஜகவின் எஸ்.ஜி சூர்யா பதிவிட்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லாந்தை... பெரிய தாமரைக்குடி சின்ன தாமரை கொடி ஆகிய கிராமங்களுக்கு ரயில்வே மேம்பாலம் அமைத்துக் கொடுத்தார் மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்.... பல வருடங்கள் கோரிக்கையாகவும் ஏக்கமாகவும் இருந்த மக்கள் பிரச்சனையை ஒரே நாளில் ரயில்வே அமைச்சகத்துடன் பேசி செய்து கொடுத்தார் என்று பதிவிட்டுள்ளார் சூர்யா பின்னர் அதனை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பகிர்ந்தும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன் உங்க பெயரை வெச்சு போட்டோஷாப் செய்து தவறான செய்தி பரப்பி உங்கள பொதுவெளியில விமர்சனத்துக்கு உள்ளாக்கின அண்ணனை மன்னிச்சுருங்க. வழக்கமா எல்லா பிஜேபி தலைவர்களும் நம்புற மாதிரி, whatsapp forward உண்மையின்னு நம்பி போஸ்ட் பண்ணிட்டார் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

உத்திர பிரதேசமாக இருந்திருந்தால் எளிதாக ஏமாற்றி இருக்கலாம். தமிழ்நாடு என்பதால் போட்டோஷாப் என்று கண்டு பிடித்து உதைக்க துவங்கி விட்டார்கள். உடனடியாக இது "Representative image" என்று எடிட் செய்து விட்டார் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன். பாஜகவினர் இப்படி வாண்டட் ஆக போய் சிக்கி நெட்டிசன்களுக்கு கன்டெண்ட் கொடுத்து வருகின்றனர் என்று எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications