பாஜக 350 இடங்களில் வெல்லும்.. தமிழ்நாட்டிலும் மலரும் தாமரை.. பிரபல பொருளாதார நிபுணர் சொல்வதை பாருங்க
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனித்தே 330 - 350 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் தமிழ்நாட்டில் 5 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் பிரபல பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா கணித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்னும் 6 கட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. வரும் 26 ஆம் தேதி கேரளா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 84 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. கடைசி கட்ட மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், பிற மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்தே 350 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் வெல்லும் என்று பிரபல பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.
350 இடங்களில் பாஜக: பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் சுர்ஜித் பல்லா இந்த தகவலை கூறியுள்ளார். சுர்ஜித் பல்லா கூறியதாவது:- புள்ளி விவர சாத்தியக் கூறுகளின் அடிப்படையில், பாஜக 330 - 350 இடங்கள் வரை தனித்தே வெற்றி பெறும். பாஜக மட்டுமே இத்தனை இடங்களில் வெற்றி பெறும். கூட்டணி கட்சிகளையும் சேர்த்து அல்ல.
5 - 7 சீட்கள் உயரும்: கடந்த 2019 ஆம் ஆண்டு ஒப்பிடும் போது 5 முதல் 7 சதவிகிதம் சீட்களின் எண்ணிக்கை உயரலாம். எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெறலாம். 2014 தேர்தலுடன் ஒப்பிடும் போது இது 2 சதவிகிதம் குறைவு ஆகும். எதிர்க்கட்சியின் பிரச்சினை என்னவென்றால் கூட்டணியும் அதன் தலைமையும் தான். பொருளாதார விவகாரம் அதிகம்.. தலைமை விவகாரம் இரண்டாவது..
தமிழ்நாட்டில் 5 இடங்கள்: இந்த இரண்டுமே பாஜகவிற்கு சாதகமாக உள்ளது. பெரும் அளவு மக்களை கவரும் விதமாக ஒரே ஒரு தலைவரை எதிர்க்கட்சி தேர்ந்து எடுத்து இருக்குமானால் போட்டி இருந்து இருக்கும் என நான் கருதுகிறேன். தொடர்ந்து பலவீனமாக இருக்கும் தமிழ்நாட்டில் கூட பாஜக 5 இடங்களில் வெற்றி பெறும்.
கேரளாவில் எத்தனை?: அதையும் தாண்டினால் கூட நான் ஆச்சர்யப்பட மாட்டேன். கேரளாவில் ஒன்றிரண்டு இடங்களில் வரலாம். மக்களின் வாழ்க்கை தரம் எப்படி உயர்ந்து இருக்கிறது என்ற அடிப்படையில் தான் இந்தியாவில் மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுதான் அடிப்படையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications