வடசென்னை பாஜக 'கஞ்சா' அஞ்சலை, தென்சென்னை அதிமுக மலர்க்கொடி.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் இணைந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் கொலையாளிகள் நெட்வொர்க் அதிர வைக்கும் வகையில் நீள்கிறது. வடசென்னை பாஜக நிர்வாகி கஞ்சா அஞ்சலை, தென்சென்னை அதிமுக மலர்க்கொடி என பல்வேறு தரப்பினரும் ஒன்று சேர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலைச் சதியை அரங்கேற்றியிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட சென்னை மற்றும் தென்சென்னையில் அறியப்பட்ட ரவுடிகள் ஏராளமானோர் வலம் வந்து சென்னை மாநகரையே கதிகலங்க வைத்த காலமும் இருந்தது. 1990களில் சென்னையில் சேரா, வெள்ளை ரவி, ஆசைத்தம்பி, கபிலன், மனோ, பங்க் குமார், அயோத்தியா குப்பம் வீரமணி என வட சென்னை, தென்சென்னை என பாகுபாடு இல்லாமல் சென்னை மாநகரை கூறுபோட்டு ஸ்கெட்ச் போட்டு பந்தாடிக் கொண்டிருந்தனர். இவர்களில் பலரும் போலீசாரால் போட்டுத் தள்ளப்பட்டுவிட்டனர். இந்த 'தலைகளின்' வால்கள்தான் இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் மையமாக இருக்கின்றன.

Armstrong chennai

முதலில் வட சென்னை விவகாரத்தைப் பார்ப்போம். வடசென்னையில் 'பெருந் தலைகளின்' சிஷ்யர்களாக இருந்தவர்கள் ஆற்காடு சுரேஷ் அண்ட் கோ, சென்ன கேசவலு, ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணன் அண்ட் பிரதர்ஸ்.

பாஜக 'கஞ்சா' அஞ்சலைக்காக தொடங்கிய யுத்தம்: வடசென்னையில் ஆற்காடு சுரேஷ், சென்ன கேசவலு என்ற சின்னா இருவருமே நெருங்கிய சகாக்களாக வலம் வந்தனர். அப்போது கணவரை விட்டு பிரிந்து வந்த கஞ்சா அஞ்சலையை (இவர்தான் பாஜக நிர்வாகி) சின்னா என்ற சென்ன கேசவலு காதலியாக்கிக் கொண்டார். கஞ்சா அஞ்சலைக்கு 'டார்கெட்' வைத்திருந்த ஆற்காடு சுரேஷுக்கு இதில் கோபம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கஞ்சா அஞ்சலையை தன் கஸ்டடியில் வைத்துக் கொண்டார் ஆற்காடு சுரேஷ். இங்கிருந்துதான் ஆற்காடு சுரேஷ், சின்னா என்ற கேசவலு மோதல் தொடங்கி ஆம்ஸ்ட்ராங் கொலையில் முடிந்திருக்கிறது.

முந்திக் கொண்ட ஆற்காடு சுரேஷ்: ஆற்காடு சுரேஷ், சின்னா இருவருமே முதலில் யாரை போட்டுத்தள்ளுவது என ஸ்கெட்ச் போட்டு காத்திருந்தனர். 2010-ம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கோஷ்டி முந்திக் கொள்ள சின்னாவும் அவரது வழக்கறிஞர் பகத்சிங்கும் போட்டுத் தள்ளப்பட்டனர். சின்னாவை போட்டுத் தள்ள ஆற்காடு சுரேஷுக்கு உதவியாக இருந்தது 'கஞ்சா' அஞ்சலைதானாம். இந்த அஞ்சலைக்காக நண்பர் ஆற்காடு சுரேஷிடம் வெட்டுப்பட்டு உயிரிழந்ததுதான் சின்னாவின் சரித்திரம்.

தென்னரசுவை கொன்ற ஆற்காடு சுரேஷ் கோஷ்டி: இதே காலகட்டத்தில் சின்னா என்ற சென்ன கேசவலு, ஆற்காடு சுரேஷின் சகாவாக இருந்த ஆம்ஸ்ட்ராங் அரசியலில் செல்வாக்கு பெறவும் தொடங்குகிறார். தமிழக பகுஜன் சமாஜ் கட்சியும் ஆம்ஸ்ட்ராங் வசமாகிறது. ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்களாக இருந்தவர்கள் பாம் சரவணன், சம்பத். இவர்களது தம்பி தென்னரசு. பாம் சரவணன் சிறையில் இருந்த போது 2015-ம் ஆண்டு தென்னரசுவை ஒரு கும்பல் போட்டுத் தள்ளியது. தென்னரசுவை அப்போது போட்டுத் தள்ளியது ஆற்காடு சுரேஷ் கும்பல்தான். தென்னரசு கொலையான சில நாட்களிலேயே ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா, என்ற பொன்னை பாலா, அம்பேத்கர், ஜெயசீலன், கலாநிதி, அசோக் குமார் ஆகியோர் போலீசில் சரணடைந்திருந்தனர்.

ஸ்கெட்ச் போட்ட கஞ்சா அஞ்சலை: வடசென்னையில் 'தலையெடுக்கிறவர்களை' எல்லாம் தலையெடுத்து வந்த ஆற்காடு சுரேஷுக்கும் நாள் குறித்தது எதிர்கோஷ்டி. 2023-ம் ஆண்டு தென் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷ் வெட்டிப் படுலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையின் ஆம்ஸ்ட்ராங் இருக்கிறார் என்பதாலேயே ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலா என்ற பொன்னை பாலா தலைமையிலான கோஷ்டி கடந்த மே 5-ந் தேதி ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்தது. காதலன் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்டு உளவு பார்த்து அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததே இப்போது தப்பி ஓடி தலைமறைவாகிவிட்ட்ட பாஜக நிர்வாகியான 'கஞ்சா' அஞ்சலைதானாம். இதுதான் வடசென்னையின் ரத்த சரித்திரம்..

தென் சென்னை தொடர்பு: சரி ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தென்சென்னை மலர்க்கொடிக்கும் எப்படி தொடர்பு? வடசென்னை ரவுடி ஆற்காடு சுரேஷ்-க்கு அடைக்கலம் கொடுப்பவர்களில் முதன்மையானவராக இருந்தது தென்சென்னை அயோத்தியா குப்பம் வீரமணி. அதிமுகவில் இருந்தவர் வீரமணி. அதே தென் சென்னையில் அதிமுகவில் வளர்ந்து வந்த மற்றொரு ரவுடி தோட்டம் சேகர். இருவருக்கும் இடையே அதிமுகவில் யார் பெரியவர்? யார் எம்.எல்.ஏ.சீட் பெறுவது? என்கிற போட்டி வெடித்துக் கொண்டிருந்தது. இந்த மோதலில்தான் தோட்டம் சேகரை மயிலை சிவகுமார் போட்டுத் தள்ளுகிறார். இந்த மயிலை சிவகுமார் 20 ஆண்டுகள் கழித்து தோட்டம் சேகரின் 3-வது மனைவி மலர்க்கொடியின் 2 மகன்களால் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இப்போது மலர்க்கொடியின் மகன்கள் சிறையில் உள்ளனர். 2019-ல் மலர்க்கொடியை ஷேக் என்ற கேங் சென்னை மாநகரின் அண்ணாசலையில் வைத்து பட்டப் பகலில் வெட்டிக் கொல்ல முயன்று நாட்டு வெடிகுண்டுகளை எல்லாம் வீசியது. அதில் உயிர் தப்பி நடுரோட்டில், அய்யோ என்னை காப்பாற்றுங்க என கதறியவர்தான் இந்த மலர்க்கொடி.
ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங் தரப்பு மீது இருந்து மலர்க்கொடி தரப்புக்கும் கோபம் இருந்து வந்துள்ளது. இப்படித்தான் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தென்சென்னை அதிமுக மலர்க்கொடியும் இணைந்திருக்கிறாராம். வழக்கறிஞர் அருள் மூலம் கூலிப்படைகளுக்கு பணம் சப்ளை செய்யும் பொறுப்பு மலர்க்கொடி வசம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாம். இப்போது மலர்க்கொடியையும் போலீஸ் தூக்கி இருக்கிறது.

அதாவது காதலன் ஆற்காடு சுரேஷ் கொலைக்காக வடசென்னை பாஜக கஞ்சா அஞ்சலை ஸ்கெட்ச் போட்டு உளவு பார்த்து கூலிப்படையை ஏவ, தென்சென்னை அதிமுக மலர்க்கொடி, கூலிப்படைக்கு பணப்பட்டுவாடா செய்து ஆம்ஸ்ட்ராங் 'சரித்திரத்தை' முடித்துள்ளனர் என்கிறது போலீஸ் வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+