ஆபரேஷன் 27! பாஜகவின் ‘விஸ்வரூபம்’.. 9 தொகுதிகளில் கதை ஓவர்! இறங்கி வேலை பார்க்கும் டெல்லி.. என்னாச்சு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளை ஏற்கனவே டெல்லி பாஜக கைகழுவிவிட்டதாம். அந்த தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு குறைவு என்று பாஜக செலவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டதாம்.
மொத்தம் குறிவைக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில், அதிகபட்ச இடங்களை அள்ளியே தீரவேண்டும் என்கிற வெறியில் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக 27 தொகுதிகளையும் தரம் பிரித்து, மைக்ரோ லெவல் பிளானிங்கில் இறங்கியுள்ளது 'கமலாலயம்'. ஆனால், இந்த அதிரடி ஆட்டத்தில் ஒரு 'ட்விஸ்ட்' அரங்கேறியுள்ளது.

'நோ சான்ஸ்' லிஸ்ட்: ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகள்!
பாஜவின் வியூக வகுப்பாளர்கள் கொடுத்த ரிப்போர்ட் படி, சில தொகுதிகளில் எவ்வளவு முட்டினாலும் 'ரிசல்ட்' கிடைப்பது கடினம் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, "வெற்றிக்கு வாய்ப்பே இல்லை" என கருதப்படும் 9 தொகுதிகளைத் தனி லிஸ்ட்டாகப் பிரித்து, அங்கே எனர்ஜியை வேஸ்ட் செய்ய வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
அந்த லிஸ்ட்டில் உள்ள தொகுதிகள்:
ஆவடி
திருவண்ணாமலை
தளி
திருப்பத்தூர்
திருவாரூர்
தஞ்சாவூர்
கந்தர்வக்கோட்டை
அறந்தாங்கி
மானாமதுரை
வியூகம் என்ன?
இந்த 9 தொகுதிகளில் வளங்களை (Resources) விரயம் செய்வதை விட, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் மற்ற தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. "ஜெயிக்கிற குதிரை மேல பணத்தை கட்டுங்க" என்கிற பாணியில், மற்ற தொகுதிகளில் பூத் கமிட்டி முதல் தேர்தல் நிதி வரை அனைத்தையும் வாரி இறைக்கத் தயாராகிவிட்டனர்.
தமிழக பாஜவின் இந்த அதிரடி வியூகத்தில் மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுவது அதன் 'ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்' முறைதான். வெற்றி வாய்ப்பு மங்கியுள்ள ஆவடி, திருவண்ணாமலை, தளி, திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சாவூர், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் மானாமதுரை ஆகிய ஒன்பது தொகுதிகளையும் "வெல்ல முடியாத இடங்கள்" என கறாராகப் பட்டியலிட்டுள்ள அக்கட்சித் தலைமை, அங்கு தேர்தல் பணிகளுக்காகச் செலவிடப்படும் உழைப்பு, நிதி மற்றும் நேரத்தை முற்றிலுமாகத் தவிர்க்க முடிவெடுத்துள்ளது.
பணத்தை இறக்க வேண்டாம் - முக்கிய முடிவு
தேவையில்லாத இடங்களில் முட்டி மோதுவதை விட, வெற்றிக்கு அருகாமையில் இருக்கும் மற்ற தொகுதிகளில் அந்த ஆற்றலை ஒருமுகப்படுத்துவதே புத்திசாலித்தனம் என அமித் ஷா டீம் கணக்குப் போடுகிறது. இதன் காரணமாக, இந்தப் பகுதிகளில் பெரிய அளவிலான விளம்பரங்களோ, நட்சத்திரப் பேச்சாளர்களின் வருகையோ அல்லது தேர்தல் செலவுகளோ இருக்காது என்பதால், உள்ளூர் நிர்வாகிகள் இப்போதே சோர்ந்து போயுள்ளனர். "ஜெயிக்கிற இடத்துல மட்டும் வேலையை காட்டுங்க, மத்த இடத்துல ஜஸ்ட் அட்டெண்டன்ஸ் போடுங்க" என மேலிடம் போட்ட வாய்மொழி உத்தரவு, பாஜவின் தேர்தல் களத்தை இருவேறு துருவங்களாகப் பிரித்துக் காட்டியுள்ளது.
தமிழகத்தின் ஒவ்வொரு தெருவிலும் மோடியின் முகம் தெரிய வேண்டும் என்கிற முனைப்பில் வேலைகள் நடந்தாலும், தேர்தல் கணக்கு என்று வரும்போது பாஜ மிகவும் 'பிராக்டிகலாக' காய் நகர்த்தத் தொடங்கியிருப்பது மற்ற கட்சிகளையே சற்று யோசிக்க வைத்துள்ளது.
கோட்டையை பிடிக்கப் போவது யார்? தாமரை மலருமா அல்லது இந்த 9 தொகுதிகளைப் போலவே மற்ற இடங்களும் 'மிஸ்' ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications