அத்வானி; முர்மு எங்கே? சோனியா ஏன் வரல? ராமர் கோயில் கலாட்டா அரசியல்!
சென்னை: ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சி மீண்டும் அரசியலாக்கப் பட்டுள்ளது.
பாஜக எது செய்தாலும் எதிர்க்கட்சிகள்தான் அதைக் கடுமையாக எதிர்க்கும். ஆனால், இந்த முறை சந்நியாசிகளே பாஜகவை எதிர்க்கத் தொடங்கி உள்ளனர்.

அதில் பூரி சங்கராச்சாரியார் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். "ராமர் சிலையைத் தொட்டு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யும்போது நான் கூட நின்று கைதட்ட வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். தான் அந்த விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் கூறி இருக்கிறார்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷித் போன்ற அமைப்புகள் இந்த விழாவைக் கையில் எடுத்துள்ளனர். ஜனவரி 25 முதல் மார்ச் 25 வரை 60 நாள்களில் நாடு முழுவதும் இருந்து 2 கோடி பக்தர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்ல இவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள் எனத் தெரிகிறது.
ஆகவே, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களுக்கு வந்த அழைப்பைப் புறக்கணித்துள்ளனர். அது குறித்து, 'காங்கிரஸ் ஒரு இந்து விரோத கட்சி என்பதை நிரூபித்துள்ளது' என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

எப்படிப் பார்த்தாலும் இந்தியாவின் ஹாட் டாப்பிக் இன்னும் சில மாதங்கள் வரை ராமர் கோயில்தான். பிரதமர் மோடிதான் என்பது நிச்சயம்.
ராமர் கோயிலை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா? இந்தக் கேள்விக்கு விளக்கம் கேட்டோம்.
600 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு:
முதலில் பாஜகவைச் சேர்ந்த ஜி.கே.நாகராஜ், "இது ஏறக்குறைய 600 ஆண்டுகால பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு பாஜகவும் உச்சநீதிமன்றமும் ஒரு தீர்வை கொடுத்திருக்கிறது. 'ஸ்ரீ ராம ஜென்ம பூமி' என்ற அறக்கட்டளை மூலம் இந்தக் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
பாஜக மிகத் தெளிவாக இந்துத்துவக் கொள்கையை மக்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறது. தேர்தல் அறிக்கையிலேயே கூட அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்பதை வாக்குறுதியாகக் கூறி இருக்கிறது.

இது மட்டுமல்ல; இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு எவை எல்லாம் தடையாக உள்ளதோ அதையெல்லாம் சீர் செய்வோம் என்றும் பாஜக கூறியுள்ளது. ஒரு நிரந்தர அமைதியை நாங்கள் ஏற்படுத்துவோம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
உதாரணமாக, முதலில் ஆர்டிக்கல் 370 ஐ நிறைவேற்றி முடித்தோம். சிஏஏ சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று கடந்த தேர்தல் பரப்புரையில் கூட அமித்ஷா சொன்னார்.
ஆக, பாஜக நாட்டிற்கு எது நல்லதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டுள்ளது. காங்கிரஸ் ஓட்டுக்கு எது நல்லதோ அதைச் செய்துவருகிறது. பிரிவினைவாத அரசியலைத்தான் அக்கட்சி தொடர்ந்து செய்து வருகிறது. இப்போது திடீரென்று சாதிவாரி கணக்கெடுப்பைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

ராமர் கோயில் தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த போது காங்கிரஸ் அதை வரவேற்பதாகச் சொன்னது. கட்டி முடித்து இப்போது திறக்க இருக்கும் போது அதற்காக அழைப்பு விடுத்தால், அதை நிராகரிக்கிறது.
இது ஏதோ இன்றைக்கு நேற்றுக்கு முடிவு செய்த நிகழ்ச்சி அல்ல. முன்பே அதற்கான திட்டத்தை வகுத்துக் கூறி இருந்தோம். அதன்படி இப்போது திறப்பு விழா நடக்கிறது.
குடியரசுத் தலைவருக்கே மரியாதை இல்லை:
ஆனந்த் சீனிவாசன், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவு 25 முதல் 28 வரை ஷரத்துகள் என்ன சொல்கிறது தெரியுமா? மதம் என்பது தனிப்பட்ட விவகாரம்.
அதில் அரசு தலையிடவே கூடாது என்று சொல்கிறது. நான் ராம பக்தர்தான். கடவுளை வணங்குபவன் தான். அதை எல்லாம் என் வீட்டிற்குள் செய்துகொள்கிறேன்.
எந்தளவுக்கு என் மதச் சடங்குகளைப் பின்பற்ற எனக்கு உரிமை உள்ளதோ அதே அளவு மற்ற மதத்தினர் அவர்களின் மத நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்க உரிமை உள்ளது.

இதுதான் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம். இவர்கள் சொல்லும் 370 சட்டப் பிரிவு பற்றி இந்தியாவின் சட்ட வல்லுநர் ஃபாலி சாம் நாரிமன் என்ன சொல்லி இருக்கிறார் என்று இவர்கள் கொஞ்சம் படிக்க வேண்டும். அதைப்போன்று அவரது மகன் என்ன சொன்னார் என்பதையும் படித்துப் பார்க்கட்டும்.
ஒருமுறை நீதியரசர் கிருஷ்ண ஐயர், "அதுதான் சரி என்பதற்காக நாங்கள் தீர்ப்பை எழுதவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு மேலே வேறு நீதிமன்றம் இல்லை. ஆகவே, அது சொல்வதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதை ஏற்றுக்கொள்வதால் அதுவே சரி என்று ஆகிவிடாது" என்று சொன்னார்.
ஆக, வேறு வழியில்லை. அதனால் ராமர் கோயில் தீர்ப்பை ஏற்றுக்கொண்டோம். அதான் உண்மை. பாஜக இதில் தலையிடவில்லை என்கிறார்கள். ஆனால், வருமானமே வராத பகுதியில் அவசர அவசரமாக ஏன் அரசு செலவில் ஏர்போர்ட் கட்டினார்கள்?

பொதுவாகக் கர்ப்ப கிரகத்திற்குள் பூஜை செய்பவர்தான் போவார். ஆனால், ராமர் கோயில் கர்ப்ப கிரகத்திற்குள் பிரதமர் செல்கிறார். ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் மோடி இல்லை. அவருக்கும் அந்த அறக்கட்டளைக்கும் சம்பந்தமே இல்லை.
இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முக்கிய காரணம் அத்வானி. அவர்தான் அந்தக் காலத்தில் ரத யாத்திரை சென்றார். அவர் 95 வயதில் இப்போது டெல்லியில் வசித்து வருகிறார். அவரை ஏன் கூப்பிடவில்லை.
இதே ராமர் கோயில் அறக்கட்டளையில் சேர்ந்து பணி செய்தவர். அவரையே கூப்பிடவில்லையே ஏன்? ஏன் குடியரசுத் தலைவரை விழாவுக்கு அழைக்கவில் லை. ஏனென்றால் அவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். அவர் கோயில் கர்ப்ப கிரகத்திற்குச் செல்ல அனுமதியில்லை.

இதைப்போலவே முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோயிந்த்தை ஒடிசா கோயில் உள்ளே விடவில்லை. ஏன் அவருக்கும் கர்ப்ப கிரகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. இதுதான் பாஜகவின் உண்மை முகம்" என்கிறார்.
அரசியல் விழா இது கோயில் திருவிழா அல்ல!
எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ், "தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 1000 கோயில்களுக்கு மேல் குடமுழுக்கு நடந்துள்ளது. அதைப்போல் இந்தியாவில் பல கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த விழாக்களில் எல்லாம் இஸ்லாமியர்கள் மீது பழியைத் தூக்கிப் போட்டு நடத்தப்படுபவை அல்ல.

ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா அப்படியானதல்ல. இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைப் பரப்பி, அவர்களைப் பழிச்சொல்லுக்கு ஆளாக்கி, காலங்காலமாக அப்படியான ஒரு பரப்புரையைக் கட்டவிழ்த்துவிட்டு, அதன் தொடர்ச்சியாக நடத்தப்படும் விழா இது.
கோயிலிருந்த இடத்தில் மசூதி கட்டி விட்டார்கள் எனப் பரப்புரை செய்தார் கள். ஆனால், ராமர் கோயில் தீர்ப்பில் கோயில் அங்கே இருந்தது என்பதை உறுதிப்படுத்தவில்லை.

அதைப்போன்று அனுமதியை மீறித்தான் 1948இல் ராமர் சிலையைக் கொண்டு போய் அந்த இடத்தில் வைத்தார்கள் என்று சொன்ன கருத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆமாம். அத்துமீறித்தான் வைத்தார்கள். அது சட்டவிரோதம்தான் என்று கூறி இருக்கிறது.
அதன்பின்னர் என்ன நடந்தது 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அது அப்பட்டமான சட்டவிரோத செயல் என்று அதே தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே ராமர் கோயில் திறப்பு விழா என்பது அரசியல் ரீதியாக ஒரு பிரிவு மக்களை அணிதிரட்டுவதற்கான திருவிழா. அது கோயில் திருவிழா இல்லை" என்கிறார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜர், "இந்தக் கோயில் திறப்பு விழாவை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். இது மிகப்பெரிய விழா. உலகமே வியக்கும் விழா. ராம ராஜ்ஜியம் மீண்டும் வரப்போகிறது. ஆகவே அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்" என்கிறார்
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications