Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அந்த பாம்பு நீங்கதான்!” ரிப்பீட் ஆன உதயநிதியின் குட்டி ஸ்டோரி! பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவையும், அதிமுகவையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

மதுரை மாவட்டம் மேலூரில் திமுக சார்பில் திமுக மூத்த நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பணமுடிப்புடன் கூடிய பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதேபோல அதிமுக மற்றும் பாஜக குறித்தும் விமர்சித்திருந்தார். மேலும் பாம்பை பாஜகவுடன் ஒப்பிட்டும், புதரை அதிமுகவுடன் ஒப்பிட்டும், தமிழ்நாட்டை வீடு என்று கூறியும் குட்டி ஸ்டோரியை கூறியிருந்தார்.

BJPs SR Shekhar condemns Minister Udayanidhi stalin on Sanathanam issue

அதாவது, "வீட்டிற்குள் திடீரென ஒருநாள் பாம்பு வந்துவிட்டது. அதை அடித்தவுடன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டது. ஆனால் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வீட்டிற்கே திரும்ப வந்தது. இது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், வீட்டிற்கு அருகே புதர் ஒன்று இருந்திருக்கிறது. அங்கிருந்துதான் அது மீண்டும் மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறது. பாம்பு வீட்டுக்குள் வராமல் இருக்க வேண்டும் என்றால் புதர் மற்றும் குப்பையை அகற்ற வேண்டும்" என்று பாஜகவையும், அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், "அந்த பாம்பு நீங்கள்தான்" என்று உதயநிதியையும் திமுகவையும் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் X சோஷியல் மீடியா தளத்தில், "நச்சுப்பாம்பை நிச்சயம் விரட்ட வேண்டும். உதயநிதி தமிழக அரசியலை புதர் மற்றும் நச்சு பாம்பு உதாரணத்தோடு விளக்கியது அருமை. ஆனால் விளையாட்டுத் துறையை கவனித்துக் கொண்டிருக்கும் நடிகருக்கு, தமிழகத்தின் உண்மையான வரலாறு தெரிவதற்கு வாய்ப்பில்லை.

அதனால் அவருக்கு உண்மையான நச்சுப்பாம்பு எது? புதர் எது? என்று விளக்க வேண்டியது, அரசியல் அனுபவம் உள்ளவர்களின் கடமை. உதயநிதி சொன்னது போல வீடு என்பது நம் தமிழகம்தான். ஒரு நச்சுப் பாம்பை எப்போதும் மக்கள் விரட்டி அடித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் அந்த நச்சுப் பாம்பு, ஒருமுறை
ராஜாஜி என்ற தேசியவாதியின் பின்னால் அடைக்கலம் தேடிக்கொண்டு வந்தது. பின்னர் எம். ஜி.ஆர் என்ற தேசியவாதியின் பின்னால் அடைக்கலம் தேடியது.

பாம்புக்கு இரக்கப்பட்டு பால் வார்த்த ராஜாஜியின் தவறை எம்.ஜி.யார் செய்யவில்லை. அவர் மறைவு வரை தமிழக மக்கள் அந்த நச்சுப் பாம்பை ஓரம் கட்டியே வைத்து இருந்தார். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அந்த நாச்சுப்பாம்பு , ஒரு தேசியவாதியின் பின்னால் ஒளிந்து கொண்டோ, இல்லை பல கூட்டணிகளிடம் ஒட்டிக் கொண்டேதான் நம் வீட்டிற்குள் நுழைந்து வருகிறது. நச்சு பாம்பு யார் என்று நான் விளக்க தேவை இல்லை. ஆனால் இங்கே ஒரு புதர் மண்டிக் கிடக்கிறது.

ஒவ்வொரு முறையும் அந்த நச்சுப் பாம்பு அந்த புதர் வழியாக தான் வருகிறது. ஆம், தேசியத்தை நேரடியாக ஆதரிக்காமல் இருக்கும் நம் மக்களின் அறியாமை என்னும் புதர். தேசியவாதிகள் வலுவான தலைமையாக இருக்கும் போதெல்லாம் நச்சு பாம்பு, எதிர் வரிசையில் நிற்க கூட வழி இல்லாமல் இருந்தது என்பதுதான் தமிழக வரலாறு. உதயநிதிக்கு வரலாறு தெரியவில்லை என்பதை இந்த ஒரு உதாரணத்தை மட்டும் வைத்து சொல்லி விட முடியாது. திமுகவை ஆரம்பித்ததே சனாதனத்தை எதிர்க்க என்று கூறி இருக்கிறார்.

சனாதன தர்மம் போதிக்கும் வாழ்க்கை முறைக்கு சற்றும் ஒவ்வாத பெரியாரின் திருமணத்தை எதிர்த்துதான், திமுக ஆரம்பிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. பழங்குடியின பெண் என்பதால், ஜனாதிபதியை பாராளுமன்ற கட்டடத்திற்கு அழைக்கவில்லை என்பதுதான் சனாதனம் என்று உதயநிதி கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது. பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கியதுதான் சனாதனம். அதே பழங்குடியின பெண்ணை, எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி ஆக்கி விடக்கூடாது என்று துடித்து எதிரணியில் நின்று இவர்கள் தூற்றும் ஒரு பிராமணருக்கு வாக்களித்தவர்கள்தான் இந்த போலி சனாதன எதிர்ப்பாளிகள்.

இவர்களின் இந்த மனநிலையை தான் ஒழிக்க வேண்டும். எனவே, உதயநிதி கூறியது போல, புதரை நீக்குவதும் , நச்சு பாம்பை விரட்டுவதும் தமிழகம் எனும் வீட்டிற்கு அவசியம். அந்தப் புதர் மக்களின் அறியாமை பாம்பு நீங்கள்தான் ஐயா. இதை மக்கள் உணர்ந்து விரைவில் மாற்றங்களை செய்வார்கள்"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+