தைப்பூசத்தன்று சென்னையில் நெகிழ்ச்சி.. பாஜகவின் மனோஜ் பி செல்வம் தந்த சர்ப்ரைஸ்.. மகிழ்ந்த பக்தர்கள்
சென்னை: தைப்பூசம் பண்டிகை தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் சென்னையில் தைப்பூசத்தை ஓட்டி முக்கிய கோயில்களை அன்னதானம் வழங்கி அசத்தி உள்ளார்.
முருகக் கடவுளின் முக்கிய திருநாளான தைப்பூசம் பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்பட கோயில்களிலும், மருதமலை, குன்றத்தூர், சிவபுரி, திருப்போரூர்,குன்றக்குடி, வடலூர், வடபழனி, வயலூர், மயிலம், தோரணமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தைபூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பழனியிலும், திருச்செந்தூரிலும் பக்தர்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் இருந்தது. முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமானோர் கோயில்களுக்கு சென்றார்கள்

தைப்பூச தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் திரு வினோஜ் பி செல்வம் சார்பாக இன்று முன்தினம் (25-01-2024) சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
சென்னையில் எந்தெந்த கோயில்கள்: சென்னையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பூங்காநகரில் அமைந்துள்ள கந்தகோட்டம் திருக்கோவில், திருவல்லிக்கேணியில் உள்ள எட்டாம்படை வீடு ஸ்ரீ முருகன் திருக்கோவில், வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், அமைந்தகரையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்களில் அன்னதானம் நடந்தது. அன்னதான நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் போது கோவில்களில் சிறப்பு பிரச்சாரம் நடைபெற்றதுடன் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி செயல்படுத்திய பாஜகவின் பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் வெகுவாக பாராட்டினார்.












Click it and Unblock the Notifications