Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி உங்களைத் தூங்க வைப்பார்.. காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி சரமாரி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடி எதுவும் செய்ய மாட்டார். பீகார் சென்று உரையாற்றியதற்கு பதிலாக அவர் காஷ்மீருக்கு சென்றிருக்க வேண்டும்..விஷயம் முடிந்துவிட்டது. நம்பிக்கை இழந்து அனைவரும் இதை கடந்து செல்வோம்.. அங்கே எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி உங்களை தூங்க வைப்பார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.

BJP s Subramanian Swamy lashes out at PM Modi over Kashmir issue

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயங்கரத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப்பின் முதல் முறையாக பீகாரின் மதுபானியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார். அங்கு நமோ பாரத் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், "காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை பயங்கரவாதிகள் கொடூரமாக கொலை செய்ததை எண்ணி நாட்டு மக்கள் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பங்களுடன் ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது.

ஏராளமானோர் தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் கணவர்களை இழந்தனர். மேலும் வங்காளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் பீகார் என நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நமது துக்கமும், கோபமும் ஒன்றுதான். நண்பர்களே, இன்று இந்த பீகார் மண்ணில் இருந்து ஒட்டுமொத்த உலகுக்கும் கூறுகிறேன்.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு பின்னால் இருந்தவர்களையும் இந்தியா அடையாளம் காணும், கண்டுபிடிக்கும், தண்டிக்கும். தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளும், சதித்திட்டம் தீட்டியவர்களும், அவர்களின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள். நிச்சயம் தண்டனை வழங்கப்படும். பஹல்காமின் கொலையாளிகள் பூமியின் எல்லை வரை நிச்சயம் துரத்தப்படுவார்கள்.

இந்த கொடூர தாக்குதலுக்கு நீதி வழங்க அனைத்து முயற்சிகளும் எடுப்போம். அதில் ஒட்டுமொத்த நாடும் உறுதியுடன் இருக்கிறது. மனிதாபிமானத்தை நம்பும் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் எங்களுடன் இருக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். பயங்கரவாதத்தால் இந்தியாவின் ஆன்மா ஒருபோதும் உடைக்கப்படாது. 140 கோடி இந்தியர்களின் மன உறுதி பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களின் முதுகெலும்பை நிச்சயம் உடைக்கும்" இவ்வாறு பிரதமர் மோடி ஆவேசமாக கூறினார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேற்று கடுமையாக விமர்சித்தார். "பாஜகவுக்கு எதிர்காலத்தில் ஆட்சியை தொடரும் வாய்ப்பு இருக்க வேண்டுமெனில், தற்போதைய தலைமையில் இருப்பவர்கள் நிர்வாகத்திலிருந்து விலக வேண்டும். கடந்த கால அரசியல் தலைவர்கள் ஓய்வெடுத்ததை போலவே, இவர்கள் இருவரும் அரசியல் ஓய்வை ஏற்கவேண்டும்" என்று கூறியிருந்தார்

இந்நிலையில் இன்று சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில், மோடி எதுவும் செய்ய மாட்டார். பீகார் சென்று உரையாற்றியதற்கு பதிலாக அவர் காஷ்மீருக்கு சென்றிருக்க வேண்டும்..விஷயம் முடிந்துவிட்டது. நம்பிக்கை இழந்து அனைவரும் இதை கடந்து செல்வோம்.. அங்கே எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி உங்களை தூங்க வைப்பார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+