பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்! திமுகவுக்கு ஷாக் தந்த தமிழக காங்கிரஸ்!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்ததன் காரணமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், கருப்பு பலூன்களை பறக்க விடுவோம் என காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் அறிவித்து பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி.துறை மாநில தலைவர் ரஞ்சன் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''சிறந்த கல்வி வசதி, கல்வி நிறுவனங்களில் பாகுபாடு அற்ற நிலை, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். இந்த பிரச்சினை நம்மால் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் 2021 வரை மட்டும் இந்தியாவில் 35 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ''
''நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை 82 ஆயிரத்து 514 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட விடாமல் மோடி அரசு தடை செய்துள்ளது.''
''நரேந்திர மோடி பிரதமர் ஆனதிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.இவ்வளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அவர்களது சமூகப் பொருளாதார வாழ்க்கை நிலை என்ன? இரண்டு முக்கிய விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உண்மையை சொல்லப்போனால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 95 சதவிகிதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்.''
''பிரதமர் மோடியின் பொய்யான வாக்குறுதியே மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. 82 ஆயிரத்து 514 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு மோடியே பொறுப்பு. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட ரோஹித் வெமுலா சட்டத்தை உடனே அமல் படுத்த வேண்டும்.''
''2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசே தூக்கி எறிய இளைஞர்கள் முன் வர வேண்டும். அதற்கு முன்னோட்டமாக நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வருகை கருப்பு பலூன்களை பறக்க விடுவோம். இளைஞர்கள் அனைவரும் திரண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.''
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications