கருப்பு பெட்டியில் ஏற்பட்ட சேதம்.. அவசரமாக அமெரிக்காவிற்கு அனுப்பிய ஏர் இந்தியா.. வந்த புது சிக்கல்
சென்னை: ஜூன் 19, 2025 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, விபத்தில் சேதமடைந்த விமானத்தின் கருப்பு பெட்டியை (Black Box) அமெரிக்காவிற்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. விமான விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட தீ விபத்தில் கறுப்புப் பெட்டி பதிவுக் கருவி வெளிப்புறத்தில் பலத்த சேதமடைந்ததால், இந்தியாவில் தரவுகளைப் பிரித்தெடுப்பது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானப் பதிவுக் கருவி அமெரிக்காவுக்கு அனுப்பி வாய்ப்பு
சர்வதேச விதிமுறைகளின்படி, விபத்து நடந்த நாட்டின் விசாரணை அமைப்பான விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (Aircraft Accident Investigation Bureau - AAIB), இந்த விபத்து குறித்து விசாரிக்க வேண்டும். அந்த வகையில், அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்தின் (National Safety Transport Board - NTSB) ஆய்வகத்தில் டிஜிட்டல் விமான தரவுப் பதிவியிலிருந்து (Digital Flight Data Recorder - DFDR) பெறப்படும் தரவுகள் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் டெல்லியில் தலைமையகத்தில் ஆய்வகத்தை அமைத்திருந்தாலும், பலத்த சேதமடைந்த பதிவுக் கருவிகளிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுக்கும் அளவிற்கு இன்னும் முழுமையாக அது தயார்படுத்தப்படவில்லை. இந்திய அதிகாரிகளின் மேற்பார்வையில், முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்தின் குழு கறுப்புப் பெட்டியை தங்கள் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லும்" என்றார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 53 பேர் பிரிட்டன் நாட்டினர் என்பதால், இங்கிலாந்தின் விமான விபத்து புலனாய்வு பிரிவும் (Air Accidents Investigation Branch) விசாரணையில் பங்கேற்க உள்ளது.
விபத்துக்கான காரணம்
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரும், தரையில் இருந்த 33 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தின் கறுப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் விமான தரவுப் பதிவி மற்றும் காக்பிட் குரல் பதிவி (Cockpit Voice Recorder - CVR) ஆகியவை பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். விபத்தின்போது ஏற்படும் அதிர்ச்சிகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஏனெனில் விபத்தின்போது வால் பகுதி குறைந்த தாக்கத்தையே சந்திக்கும். இருப்பினும், விபத்தின்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் தீ விபத்துகளால் கறுப்புப் பெட்டிக்கு சேதம் ஏற்படுவது வழக்கம்தான்.
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள தரவுகள் முக்கியமானவை. விமான தரவுப் பதிவி விமானத்தின் வேகம், உயரம், நேரம் போன்ற பல தொழில்நுட்ப அளவுருக்கள் பற்றிய தகவல்களை வழங்கும். காக்பிட் குரல் பதிவியில் விமானி உரையாடல்கள், எச்சரிக்கைகள் உள்ளிட்ட காக்பிட்டில் பதிவான ஆடியோ பதிவுகள் இருக்கும்.
சேதமடைந்த கறுப்புப் பெட்டியிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கும் பணி இரண்டு நாட்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகலாம். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பதிவுக் கருவி சேதமடைந்துள்ளதால், டேட்டா இழப்பு ஏற்படாமல் இருக்க, உளேள் இருக்கும் மெமரி கார்டை கவனமாக அகற்ற வேண்டும். மேலும், மின்னணு சர்க்யூட்டும்.. சேதமடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
விசாரணையாளர்கள் விமானத்தின் இறக்கைகளில் உள்ள ஃப்ளாப்ஸ் சரியாக நீட்டப்பட்டிருந்ததா, தரையிறங்கும் சக்கரம் ஏன் மேலே செல்லவில்லை என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மின்னணு கோளாறு அல்லது எரிபொருள் கலப்படம் காரணமாக இயந்திரங்கள் செயலிழந்தனவா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
நவீன விமானங்களில் முக்கியமான பாகங்கள் அல்லது அமைப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இருக்கும். இதனால் ஒரு பாகம் செயலிழந்தாலும் மற்றொன்று செயல்படும். இந்த விமானம் ஒரே ஒரு எஞ்சின் உடன் 345 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க இரண்டு எஞ்சினும் பழுதானதா என்றும் விசாரணை செய்யப்படுகிறது.
விபத்துக்குள்ளாகும் முன் விமானியால் அனுப்பப்பட்ட அவசர கால அழைப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு பதிலளிக்கவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் சமீர் குமார் சின்ஹா தெரிவித்திருந்தார்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்புப் பெட்டி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு, தரவுகள் பிரித்தெடுக்கப்பட்டு, விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications