இதுதான் சென்னை! கஷ்டமான சிகிச்சையை.. ரோபோக்களை வைத்து செய்து அசத்திய மருத்துவர்கள்
சென்னை: இரத்த நாள சுருக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரோபோக்களை கொண்டு அறுவைசிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது தனியார் மருத்துவமனை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய் பாதிப்புகளுக்கிடையே மருத்துவ முறைகள் நவீனப்படுத்துவது தவிர்க்க இயலாததாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிட்டு வந்த நிலையில் ரோபோக்களை கொண்டு தனியார் மருத்துவமனை சிகிச்சையளித்திருப்பது அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.
புதிய நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட அளவில் புதிய நோய்கள், குறைபாடுகளால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிகிச்சை
இதனை சமாளிப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் அதே அளவில் புதிய கண்டுபிடிப்புகளும், மருத்துவ முறைகளில் நவீனமும் அவசயமாகிறது என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இரத்த நாள சுருக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நவீன ரோபோக்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்து அசத்தியுள்ளது சென்னையின் தனியார் மருத்துவமனை.லைஃப்லைன் மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக்கியுள்ளனர்.

லைஃப்லைன்
சிகிச்சையை பொறுத்த அளவில் நோயாளிகளும் இரு வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஒருவர் மீடியன் ஆர்குவேட் லிகமென்ட் சிண்ட்ரோம் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மீடியன் ஆர்குவேட் லிகமென்ட் சிண்ட்ரோம் என்பது மார்புப் பகுதியில் உள்ள திசுக்களின் வில் வடிவப் பட்டையானது மேல் வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு இரத்தத்தை வழங்கும் தமனியை அழுத்தும் போது இந்த ஏற்படும். இதைத்தான் மீடியன் ஆர்குவேட் லிகமென்ட் சிண்ட்ரோம் என்று அழைக்கிறோம்.

எப்படி ?
இது உயிரிழப்பு வரை கொண்டு செல்லாது என்றாலும் தமனியில் அடைப்பு ஏற்பட்டு குடலின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதன் காரணமாக சிறுகுடல் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல மற்றொருவர் சுப்பீரியர் மெசென்டெரிக் ஆர்டரி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருந்தார். இது சிறுகுடலின் முதல் பகுதியான மெசென்டெரிக்கில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதற்கான சிகிச்சை முறைகளும் சிக்கலானதாக இருக்கும்.

சக்ஸஸ்
இதன் பின்னணியில்தான் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை குறித்து பேட்டியளித்த மருத்துவர் ராஜ்குமார், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறினார். மேலும், நோயாளிகளுக்கு தொடர் வாந்தி மற்றும் வயிற்று வலி இருந்து வந்துள்ளது என்றும் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த பிரச்னை உள்ளது கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார். எனவே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெர்சியஸ் CMR அறுவை சிகிச்சை ரோபோ பயன்படுத்தப்பட்டதாகவும் மருத்துவர் பேட்டியில் குறிப்பிட்டார்.

ரோபோ
இதற்கான சிகிச்சை முறைகள் முன்பு நீண்டதாக இருந்தது. தற்போது ரோபோக்கள் வந்துவிட்ட நிலையில் இது எளிமையாக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு வலி தரும் திசுக்களை கவனமாக அகற்றினோம் என மருத்துவர் விளக்கமளித்துள்ளார். இரண்டாவதாக சிகிச்சையளிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 23தான். ஆனாலும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications