’மூக்குத்தி’ அம்மணி சதி.. சுள்ளானை சுருட்டி வீச லிட்டில் சூப்பர் ஸ்டார் சதி! ரகசியம் உடைத்த பிரபலம்!
சென்னை: கமல்ஹாசனின் தக் லைஃப், தனுஷின் குபேரா, சூர்யாவின் ரெட்ரோ என முன்னணி நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து மண்ணைக் கவ்வி வரும் நிலையில் எதிர் தரப்பு ரசிகர்களை குற்றம் சாட்டி வருகின்றனர் நாயகர்களின் தீவிர ரசிகர்கள். இந்த நிலையில் படத்தை ஒழுங்காக எடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் எனவும், ஒரு தரப்பு மற்றொரு தரப்பை குறை சொல்லக் கூடாது என கூறி இருக்கிறார் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.
தமிழக அரசியலை விட தமிழ் சினிமா அரசியல் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. எந்த படம் வந்தாலும் எதிர் தரப்பு ரசிகர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு அந்த நடிகரின் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
ரஜினி கமல், விஜய் அஜித், விக்ரம் சூர்யா, சிம்பு தனுஷ் தொடங்கி தற்போது சிவகார்த்திகேயன் வரை எதிர்தரப்பு விமர்சனங்களால் தோல்விகளை சந்தித்த நடிகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். உதாரணத்திற்கு கமலஹாசனின், இந்தியன் 2 சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கடும் எதிர்வினைகளை சந்தித்தது.

படத்தை பார்க்கிறார்களோ இல்லையோ அடுத்தவர் விமர்சனத்தை காப்பி பேஸ்ட் செய்தாவது படத்தை விமர்சிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போல.. இதே போல சூர்யாவின் கங்குவா, ரெட்ரோ படத்துக்கும் எதிர்மறை விமர்சனங்களே கிடைத்தது. குறிப்பாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட கங்குவா திரைப்படம் ஆஸ்கார் விருதுவரை செல்லும் என தயாரிப்பு நிறுவனம் கூறி வந்த நிலையில் விஜய் ரசிகர்களும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் படத்தை மிகக் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இதே போல தனுஷ் படம் வெளி வந்தால் சிம்பு ரசிகர்களும், சிம்பு படம் வெளிவந்தால் தனுஷ் ரசிகர்களும் எதிர் தரப்பை விமர்சித்து வருகின்றனர். துப்பாக்கிய புடிங்க சிவா என விஜய் சிவகார்த்திகேயனை தனது இடத்தில் வைக்க ஆசைப்பட்ட நிலையில் ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகும் என்று அறிவிப்பால் கோபத்தில் கொந்தளித்தனர் விஜய் ரசிகர்கள். தற்போது அஜித், சூர்யா சிவகார்த்திகேயன் ரசிகர்களை விஜய் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நயன்தாரா தனுஷ் விவகாரம் வேறு.. இதனால் இருதரப்பு ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இப்படியாக ஒரு தரப்பு ரசிகர்களை பிற நடிகர்களின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக விமர்சித்து வருவது ஆரோக்கியம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. பேஸ்புக், டுவிட்டர் என எந்த சமூக வலைதளங்களை திறந்தாலும் ஏதாவது ஒரு நடிகரை போட்டு பொளந்து கட்டி வருகின்றனர். ஒரு படம் ரிலீஸ் ஆகி விடக்கூடாது.. அந்த நடிகர்களின் ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது என்றாலும் பிற நடிகர்களின் ரசிகர்கள் அந்த படத்தை ஓட விடாமல் செய்ய வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருப்பார்கள் போல..
தற்போது அதைத்தான் உடைத்துப் பேசி இருக்கிறார் பிரபல திரை விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன். உலக அரசியல் அளவுக்கு நடிகர்களை காலி செய்ய சதி நடப்பதாக கூறிக் கொண்டிருக்காமல், நல்ல படங்களை எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," உலகை உலுக்கி வரும் திட்டமிட்ட சதிகள்: உக்ரைனுக்கு எதிராக ஷ்யா சதி. ஈரானை தகர்க்க இஸ்ரேல் சதி. தனுஷை வீழ்த்த மூக்குத்தி அம்மணி சதி. திடீர் தளபதியை பொளக்க சுள்ளான் சதி. சுள்ளானை சுருட்டி வீச லிட்டில் சூப்பர் ஸ்டார் சதி. சூர்யாவை பொசுக்க பலதரப்பு சதி. கமலை நசுக்க தலீவர் ஃபேன்ஸ் சதி
மொக்கை படங்களை எடுத்து.. இவங்களுக்கு எதிரா இவங்களே சதி செஞ்சிக்க வேண்டியது. பழியை தூக்கி ஊர்ல இருக்கறவன் மேல போட வேண்டியது. தொடர்ந்து காட்டு மொக்கை படங்களை தந்து... படம் பாக்க வர்றவங்களுக்கு எதிரா நீங்கதான் திட்டமிட்டு சதி செஞ்சிட்டு வர்றீங்க. உருப்படியா படம் எடுக்கறதை விட்டுட்டு.. திட்டமிட்ட சதி, வட்டமிட்ட விதின்னு உருட்டிட்டு திரியாதீங்க. ஆதாரம் இருந்தா கோர்ட்ல வழக்கு போடுங்க. டப்பா படத்தை எடுத்துட்டு.. இப்படி சென்டிமென்ட் பிட் எல்லாம் போட்டா மக்கள் ஏமாறவே மாட்டாங்க. தொடர்ந்து தோத்துக்கிட்டுதான் இருப்பீங்க." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications