சீமான் அண்ணனோட ஆயுதத்தை எடுத்துட்டாரே விஜய்! சும்மாவே சலங்கை கட்டி ஆடுவாரே! இனி அனல்தான்! ப்ளூசட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமான் அண்ணனின் முப்பாட்டன் முருகனின் வேலை எடுத்துட்டீங்களே, இப்ப பாருங்க அவர் சலங்கை கட்டி ஆடுவாரு என திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் கேலி செய்து ட்வீட் போட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் நிலையில் அதையொட்டி மற்ற அரசியல் கட்சிகளை போல் தவெகவும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

Vijay seeman blue sattai maran

கடந்த வாரம் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார். அந்த பிரச்சாரம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் நேற்றைய தினம் நாகை, திருவாரூரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கினார்.

விஜய்க்கு அதிக கூட்டம்

திருச்சி, அரியலூரை போல் நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் விஜய்க்கு அதிக கூட்டம் கூடியது. விஜய் வாகனத்தின் மீது ஏறி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் தெரிவித்தார். அப்போது தொண்டர் ஒருவர் விஜய்க்கு ஆளுயர வேல் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

வேல்

விஜய் அந்த வேலை பெற்று அதை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்தார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் விஜய்க்கு கூடும் கூட்டம் குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

நயன்தாராவுக்கு கூடலையா

நயன்தாரா, விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடிவிட்டது என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஆரம்பத்தில் கேட்ட போது, சீமான், "விஜய் வருவது நல்லதுதான், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், இது ஜனநாயக நாடு, வா தம்பி" என அழைத்தார்.

தேர்தல் பிரச்சாரம்

ஆனால் அவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதுமே விஜய் குறித்து பொது வெளிகளில் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ப்ளூசட்டை மாறன், சீமானை கடுமையாக விமர்சித்திருந்தார்.

சாக்கடை

அதில் விஜய்யை சீமான் எவ்வளவு திட்டினாலும் , அவரிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்த சாக்கடையில் கால் வைக்காமல் தொடர்ந்து இவரின் திட்டமிட்ட வெறிப்பேச்சை விஜய் கண்டுகொள்ளவே இல்லை. 15 ஆண்டுகளாக கட்சி நடத்தி வரும் 60 வயது பெருசு.. தன்னை விட வயதில் குறைவாக இருப்பவரை, புதிதாக கட்சி ஆரம்பித்தவரை பார்த்து எப்படி வெறியாகிறது பாருங்கள்.

தமிழன் விஜய்

விஜய் ஒரு தமிழன். அவர் என்னை ஆதரிக்காவிட்டாலும் அவருக்கு துணையாக நிற்பேன் என சில மாதங்களுக்கு முன்பு வரை பாசம் பொழிந்த பச்சோந்தி. தற்போது நிறம் மாறியுள்ளது. தமிழக அரசியலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அதிதீய சக்தி இது என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருந்தார்.

ஆயுதம் எடுத்தா விடுவாரா

இந்த நிலையில் தற்போது மீண்டும் சீமானை விமர்சித்துள்ளார். அதில் ப்ளூசட்டை மாறன் கூறுகையில், "சீமான் அண்ணனின் முப்பாட்டன் முருகனின் வேல். அண்ணன் சாதாரணமாகவே விஜய்க்கு எதிராக சலங்கை கட்டி ஆடுவாரு. இப்ப அவரோட ஆயுதங்களை விஜய் கைல எடுத்தா விடுவாரா, அனல் கக்க பிரஸ்மீட் தரப்போறாரு. இவ்வாறு விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+