"சீரழிச்சிட்டான்".. சந்தியாவுடன் ஜாலியாக இருந்து.. முகத்தை அடித்து நசுக்கிய "ஆணழகன்".. என்ன நடந்தது?
ஆணழகன் பட்டம் வென்ற மணிகண்டன் என்பவர் கைதாகி உள்ளார்
சென்னை: "மிஸ்டர் இந்தியா ஆணழகன்" பட்டம் வென்றவர் கைதாகி சென்னை சிறையில் உள்ளார்.. விசாரணையும் நடந்து வருகிறது.. என்ன காரணம்?
Recommended Video
பாலவாக்கத்தை சேர்ந்தவர் சந்தியா மோகன்.. 31 வயதாகிறது.. இவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் தந்துள்ளார்..
அந்த புகாரில், "கடந்த 2019ம் ஆண்டு சமூக வலைதளம் மூலமாக பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் மணிகண்டன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம், உணவு முறை மற்றும் உடற்பயிற்சி குறித்தும் தனிப்பட்ட பயிற்சி மற்றும் ஆலோசனை பெற்று வந்தேன்.

உல்லாசம்
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக எங்களுக்குள் மாறியது.. கடந்த ஆண்டு நாங்கள் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோயம்புத்தூர் சென்றோம். அப்போது, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி மணிகண்டன் உல்லாசம் அனுபவித்தார்... இதையடுத்து, கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி போல் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம்.

வீடியோ
அப்போது, நானும், அவரும் நெருக்கமாக இருந்ததை அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். என்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவரிடம் கூறினேன். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர், சமீபகாலமாக என்னை அடித்து துன்புறுத்துகிறார்... மேலும் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதன்பேரில் போலீசாரும் விசாரணயை துவக்கினர். எனினும், சந்தியா போலீசில் தந்த இந்த புகாரானது பெரும் பரபரப்பை கிளப்பியது.. யார் இந்த மணிகண்டன்? யார் இந்த சந்தியா?

ஆணழகன்
சமூக சேவகியாக பலருக்கு உதவி கொண்டிருப்பவர் சந்தியா.. சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார்.. தான் சம்பாதிக்கும் பணத்தில், ஆதரவற்றோருக்கு தன் ஏராளமான உதவிகளை செய்து வருபவர்.. அப்போதுதான் மணிகண்டனை நேரில் சந்திக்க நேர்ந்தது.. பாடிபில்டர் மணிகண்டன்.. சென்னை அம்பத்தூர் காட்டுப்பாக்கத்தில் "டொன்னஸ் பிட்னஸ் சென்டர்" என்ற பெயரில் ஜிம் வைத்து நடத்தி வருகிறார்.. கட்டுமஸ்தான உடம்பை பெற்றவர் மணிகண்டன்.. இந்திய அளவில் ஆணழகன் பட்டம் வென்றரும்கூட.

ஆசை வார்த்தை
இந்த ஜிம்மில்தான் சந்தியா வந்து சேர்ந்துள்ளார்.. அப்போதுதான் மணிகண்டனுடன் நெருங்கி பழகவும் தொடங்கி உள்ளார்,. ஆசை வார்த்தை கூறி, மணிகண்டன் சந்தியாவை அவரது வீட்டுக்கும் அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, சந்தியாவை திருமணம் செய்வதாக சொல்லி, அடிக்கடி பண உதவியும் செய்வது போல தன்னை காட்டிக் கொண்டாராம்.

தாக்குதல்
இந்த லாக்டவுன் முழுக்க மணிகண்டன் வீட்டில்தான் சந்தியா ஒன்றாக இருந்துள்ளார்.. அப்போதுதான் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம், தகராறு வெடித்துள்ளது.. தகராறு வந்தபோதெல்லாம், சந்தியாவை கண்மூடித்தனமாக மணிகண்டன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.. இதனால் முகமெல்லாம் சிவந்து வீங்கி போய், சந்தியாவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன..

மிரட்டல்
மேலும் தன்னை பற்றி போலீசில் புகார் தந்தால் ஆசிட்டை ஊற்றி கொன்றுவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.. இதனால் உயிருக்கு பயந்துபோன சந்தியா, யாருக்கும் எதையும் சொல்லாமல் மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென ஒரு வீடியோ, சோஷியல் மீடியாவில் வைரலானது.. அதில் மணிகண்டன் தன்னுடைய அப்பார்ட்மென்ட்டில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரை கடுமையாக தாக்கியிருந்தார்.. எதற்காக அந்த ஊழியரை தாக்கினார் என்ற விவரம் தெரியவில்லை.

புகார் மனு
ஆனால், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகவும், இதை பார்த்த பிறகுதான் சந்தியாவுக்கு ஒரு தைரியம் வந்துள்ளது.. உடனடியாக, தனக்கு நேர்ந்த கொடுமை, பாதிப்புகள், குறித்து போலீசுக்கு தெரியப்படுத்தினார்.. போட்டோ, வீடியோ ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனுவாக அளித்தார்.. இந்த புகாரின்பேரில்தான் போலீசாரும் நடவடிக்கை எடுத்து, மணிகண்டனை கைது செய்துள்ளனர்.. 5 வழக்குகள் மணிகண்டன் மீது பதியப்பட்டுள்ளது.. விசாரணையும் நடந்து வருகிறது..!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications