சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்ச் பேசும் விஜய்.. சிட்டியை இறக்கும் ரஜினி.. டைம் மெஷின் மூலம் கொரோனாவை பந்தாடும் சூர்யா.. ஆஹா

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவுக்கு எதிராக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் இணைந்து போராடுவது போன்ற ஒரு அனிமேஷன் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று மட்டும் ஒரே நாளில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு 2500-ஐ தாண்டியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்த கொரோனாவை தடுக்க அரசு வழிமுறைகளை கூறிவருகிறது. தொலைகாட்சிகளிலும் நடிகர்களை வைத்து விளம்பரங்களை செய்து வருகிறது. என்னதான் இருந்தாலும் முன்னணி நடிகர்கள் கூறுவது போல் வருமா? என்ற ஏக்கம் மற்ற நடிகர்களின் ரசிகர்களிடம் உள்ளது.

கொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென கட்டுப்பாடு அதிகரிப்பு.. எடியூரப்பா அதிரடி! கொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென கட்டுப்பாடு அதிகரிப்பு.. எடியூரப்பா அதிரடி!

படத்தில்

படத்தில்

அதிலும் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் அரசியலுக்கு வர வேண்டும் என அவர்களது ரசிகர்கள் விரும்புகிறார்கள். எனவே கொரோனாவுக்கு எதிராக தங்கள் ஆஸ்தான நாயகர்களின் பங்கு வேண்டும் என்பதில் அவர்களிடையே மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் ரஜினி, அஜித், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்டோர் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்?

 13 லட்சம் பேர்

13 லட்சம் பேர்

அந்த கற்பனையை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் அனிமேட்டர் கதிர். மதுரையைச் சேர்ந்தவர். இவர் உருவாக்கியுள்ள கிராபிக்ஸ் வீடியோவிற்கு இணையதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 11 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை இதுவரை 13 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

 ஹாய் கைய்ஸ்

ஹாய் கைய்ஸ்

அந்த வீடியோவில் கொரோனா பாதிப்பு குறித்து சொல்லப்படுகிறது. பின்னர் முதலில் தோன்றும் விஜய், கொரோனா கிருமியை சுட்டுத் தள்ளுகிறார். அப்போது அவர் "நீ அடிச்சா அடி விழும், நான் அடிச்சா இடியே விழும்" என பஞ்ச் வசனம் பேசுகிறார். மேலும் உதவிக் கோரி ஹீரோக்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறார். அதில் ஹாய் கைய்ஸ், வந்த இடத்தில் ஒரு பிரச்சினை, நீங்கள் உதவ வேண்டும். எல்லாரும் இன்னிக்கே இப்போவே வாங்க.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அப்போது மீண்டும் கொரோனா வைரஸ் அரக்கன் போல் தோன்றுகிறது. அவற்றை போலீஸ்காரர்கள் சுட்டுத் தள்ளுகிறார்கள். ஆனால் அவை மசியவில்லை, மாறாக போலீஸாரை தாக்குகிறது. அப்போது அஜித் வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் வசீகரன் போல் தோன்றுகிறார்.

Recommended Video

    அசத்திய Bangalore... கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி?

    எந்திரன் சிட்டி

    கொரோனா வைரஸ் குறித்து அவர் பேசுகிறார். கொரோனா எதிர்க்க சூப்பர் பவர் வேண்டும், சாகாத ஒரு மனுஷன் வேண்டும் என்கிறார். இதை இப்பவே தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் கூண்டோடு அழிவோம். இதற்கு சிட்டியை விட்டால் வேற வழியே இல்லை என்கிறார் ரஜினி. சிட்டி என அழைக்க எந்திரன் சிட்டி, கைகளில் துப்பாக்கிகளுடன் வருகிறது.

     கைதி சூர்யா

    கைதி சூர்யா

    இதைத் தொடர்ந்து மாரி தனுஷ், கைதி கார்த்தி, சூர்யா உள்ளிட்டோர் சேர்ந்து கொரோனாவை அடித்து நொறுக்குகிறார்கள். வாட்ச் மெக்கானிக்கான சூர்யா, தன்னிடம் இருக்கும் டைம் மெஷின் மூலம் கொரோனா தோன்றிய நாளிற்கே சென்று அதை அழிக்கிறார். இப்படியாக இந்த வீடியோ முடிகிறது.

    English summary
    Rajini, Vijay, Ajith, Dhanush, Karthi, Surya all are acting in one animation film which is struggling against Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X