பேப்பர் பையில் ”பாம்”.. சென்னை சாலையில் வெடித்ததால் பதற்றம் - அசால்டாக எடுத்துச்சென்று அடிபட்ட ரவுடி
சென்னை: இருசக்கர வாகனத்தில் சாவகாசமாக எடுத்துச் செல்லப்பட்ட நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்துச் சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்றிரவு மாங்காட்டை அடுத்துள்ள பரணிபுதூர் நான்கு சாலை சந்திப்பில் ஒரே பைக்கில் 3 பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர் பையில் வைத்திருந்த ஒரு பொருள் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

பலத்த சத்தத்துடன் பொருள் வெடித்ததை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். என்ன நடந்தது என்று அறிய சம்பவ இடத்துக்கு அவர்கள் வருவதற்குள் மூன்று பேரும் வேகமாக தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த மாங்காடு போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெடித்துச் சிதறியது நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்தது. இதற்கிடையே சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு நபர் பலத்த காயங்களோடு கிடப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது காயமடைந்தது ஐயப்பந்தாங்கலை சேர்ந்த வினோத்குமார் (27) என்பது தெரியவந்தது. வினோத்குமார் மீது போரூர் மற்றும் மாங்காடு காவல்நிலையங்கள் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், வினோத்குமார் பேப்பர் பை ஒன்றில் நாட்டுவெடிகுண்டை எடுத்துக் கொண்டு நண்பர்களோடு பைக்கில் சென்றதாகவும், அப்போது அது கீழே விழுந்து வெடித்து காயம் அடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய வினோத்குமாரின் நண்பர்களை தேடி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications